For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசமாகும் நிலைமை.. முற்றும் மோதல்.. சீனாவுடன் "Decoupling" செய்யும் அமெரிக்கா.. டிரம்ப் பகீர்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பாம்பியோ மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை தலைவர் இடையே நடந்த மீட்டிங்கிற்கு பின் சீனாவுடன் உள்ள உறவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தக போர் நடந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு சண்டை இன்னும் மோசமாக மாறியுள்ளது. அதிலும் மொத்தமாக இரண்டு நாட்டு உறவு எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

இந்த வர்த்தக போரை முடிவிற்கு கொண்டு வர கடந்த வருடம் இறுதியில் ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அமெரிக்காவின் பொருட்களை மொத்தமாக வாங்குவதாக சீனா - அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் முன்பே இரண்டு நாடுகளுக்கு இடையிலும் மோசமான சண்டை வந்தது. கொரோனா பரவல் காரணமாக சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்க்க தொடங்கியது. இதனால் வர்த்தக போர் மீண்டும் வெடித்தது. சீனாவின் பொருட்களுக்கு மொத்தமாக தடை விதிக்க அல்லது அதிக வரி விதிக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.

டிரம்ப் என்ன சொன்னார்

டிரம்ப் என்ன சொன்னார்

இந்த நிலையில்தான் சீனாவுடன் மொத்தமாக உறவை முறிக்க உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதாவது சீனாவுடன் decoupling செய்ய இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். decoupling என்பது ஒரு நாட்டிடம் இருந்து மொத்தமாக ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்துவது. சீனாவுடன் அமெரிக்கா decoupling செய்தால் மொத்தமாக இரண்டு நாடுகள் இடையே மோதல் ஏற்படும்.

மோசம் அடையும்

மோசம் அடையும்

தற்போது இருக்கும் நிலைமை இன்னும் மோசமடையும். உலகின் இரண்டு பெரிய நாடுகள் மொத்தமாக மோசமான நிலையை அடையும். அதிபர் டிரம்ப் இந்த decoupling முடிவில் மிகவும் தீவிரமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து அழைப்பு விடுத்தது. வர்த்தக போர் தொடர்பாக இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பாம்பியோ மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை தலைவர் யாங் இடையே மீட்டிங் கடந்த வியாழக்கிழமை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறுகிறார்கள். அமெரிக்காவின் கோரிக்கைக்கு சீனா ஏற்கவில்லை என்கிறார்கள். வர்த்தக ரீதியாக அமெரிக்காவின் கோரிக்கை எதையும் சீனா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

English summary
Trade War: Trump renews his Decouling states with China again after meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X