For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுக்கு மணப்பெண்ணாக கடத்தி விற்கப்பட்ட பாகிஸ்தான் ஏழை சிறுமிகள்.. அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏழை பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் மற்றும் சீனாவில் உள்ளவர்களுக்கு மணப்பெண்ணாக விற்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பட்டியலை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

2018 முதல் கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறித்த புள்ள விவரங்கள் அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துளளது.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் இடையே லாபகரமான உறவுகளை இந்த புலானாய்வு விசாரணை பாதிக்கும் என்பதால் இந்த விசாரணையை தொடர அரசின் உயர்மட்டத்தில் இருந்து கடந்த ஜுன் மாதமே நிறுத்த வேண்டும் என அழுத்தங்கள் வந்ததாக சொல்கிறார்கள்.

சாட்சிஅளிக்க மறுப்பு

சாட்சிஅளிக்க மறுப்பு

இதன் காரணமாக கடத்தல்காரர்களுக்கு எதிரான மிகப்பெரிய வழக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அக்டோபரில், பைசலாபாத்தில் உள்ள நீதிமன்றம் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 31 சீனர்களை விடுவித்தது. ஆரம்பத்தில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுக்கு சேர்ந்த கொடுமைக்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்துவிட்டனர்,

புலனாய்வாளர்கள்

புலனாய்வாளர்கள்

ஏனெனில் அவர்களை மிரட்டியுள்ளார்கள் அத்துடன் சாட்சி சொல்லாமல் இருக்க லஞ்சம் பெற்று இருக்கிறார்கள் என்று வழக்கை நன்கு அறிந்த பாகிஸ்தான் போலீஸ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக . இருவரும் பெயர் தெரியாத நிலையில் ஊடங்களிடம் பேசியிருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பேசுவதற்கு பதிலடி கிடைக்கும் என்று அச்சம் தெரிவித்தனர்.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

அதே நேரத்தில், கடத்தல் நெட்வொர்க்குகளை விசாரித்த பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மீது "பெரும் அழுத்தத்தை" ஏற்படுத்தி, விசாரணைகளை குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் முயன்றுள்ளது என்று சீனாவில் இருந்து பல இளம் சிறுமிகளை மீட்க பெற்றோருக்கு உதவிய சமூக ஆர்வலர் சலீம் இக்பால் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்கவில்லை

கருத்து தெரிவிக்கவில்லை

ஆனால் இந்த புகார்கள் தொடர்பாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் எந்த பதிலைரயும் அளிக்க மறுத்துவிட்டனர்.

ஊடகங்கள் நிலை

ஊடகங்கள் நிலை

பாகிஸ்தானில் ஏழை சிறுமிகள் திருமணத்திற்காக சீனாவுக்கு கடத்தப்பட்ட வழக்கின் விவரங்களை நன்கு அறிந்த பல மூத்த அதிகாரிகள், கடத்தல் தொடர்பான விசாரணைகள் மந்தமடைந்துள்ளதால் விரக்தியடைந்துள்ளனர், மேலும் கடத்தல் தொடர்பான அறிக்கைகள் வெளியாவதை தடுக்க பாகிஸ்தான் ஊடகங்கள் தள்ளப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

தடுப்போம்

தடுப்போம்

இதனிடையே சீன அரசு அசோசியேட் பிரஸ்ஸின் சீன பிரிவுக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில், "சீனா மற்றும் பாகிஸ்தானின் இரு அரசாங்கங்களும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப தன்னார்வ அடிப்படையில் இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவதை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் சட்டவிரோத எல்லை தாண்டிய திருமண நடத்தைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சகித்துக்கொள்ளாமல் போராடுகின்றன."என்று தெரிவித்துள்ளது.

கடத்தி விற்பனை

கடத்தி விற்பனை

சீனாவில் மணப்பெண்ணுக்கு பற்றாக்குறை நிலவுவதால் பாகிஸ்தானில் இருந்து ஏழை பெண்களை சட்டவிரோதமாக காசு கொடுத்து வாங்கி வந்து திருமணம் செய்யும் அவல நிலை காணப்படுகிறது. இது தொடர்ந்து நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

English summary
Pakistani investigators 629 girls and women from across Pakistan who were sold as brides to Chinese men and taken to China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X