For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யய்யே! டிரான்ஸ்பாரன்ட் டாய்லெட்டுகள்.. உள்ளே "இருக்கிறது" அப்படியே தெரியும்?.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ளே இருப்பது அப்படியே வெளியே தெரியும் வகையிலான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு ட்விஸ்ட் உண்டு.

எந்த பகுதியாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவதை மக்கள் அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். வெகு சிலரே ஆபத்துக்கு பாவமில்லை என்ற அடிப்படையில் பயன்படுத்துவர்.

ஆனால் அத்தகைய பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கழிப்பறைகளின் சுகாதாரம் என்பது எப்போதுமே கேள்விக்குறிதான்.

வக்கீல் தொழிலுக்காக கம்பம் டூ சென்னை... ரகுமான் கானின் ஆதி முதல் அந்தம் வரை...!வக்கீல் தொழிலுக்காக கம்பம் டூ சென்னை... ரகுமான் கானின் ஆதி முதல் அந்தம் வரை...!

தாழ்ப்பாள்

தாழ்ப்பாள்

பொது கழிப்பறைகள் என்றாலே கதவு இருக்கும் தாழ்ப்பாள் இருக்காது. தண்ணீர் இருக்கும் ஜக் இருக்காது. ஜக், பக்கெட் இருக்கும் தண்ணீர் இருக்காது. தாழ்ப்பாள் இருக்கும் கதவு உடைந்திருக்கும். மொத்தத்தில் எல்லாமே இருந்தால் அந்த கழிவறைகள் சுத்தமாக இருக்காது. சிறுநீர் கழித்தாலும் "ஆங் வேற வேலையில்லை , தண்ணீயெல்லாம் ஊற்ற முடியாது" என நினைத்து அப்படியே விட்டுவிடுவர்.

சிறுநீர்

சிறுநீர்

இன்னும் சிலர் மலம் கழித்தாலும் இப்படித்தான் செய்வர். நம் வீடாக இருந்தால் இப்படி விடுவோமா என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏராளமானோர் பொது இடம்தானே என அலட்சியமாக விட்டுவிடுவர். இவர்கள் போன்ற சிலரால் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதை சிலர் தவிர்த்துவிட்டு சிறுநீரை அடக்குவதால் ஏராளமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

டோக்கியோ

டோக்கியோ

இதையெல்லாம் எண்ணி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரு புத்தம் புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பூங்காவில் இரு கழிப்பறைகளை நிறுவியுள்ளனர். அவை பார்ப்பதற்கு மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. இன்னொரு ஒளிபுகும் தன்மையுடன் உள்ளன. அதாவது வெளியே இருந்து உள்ளே பார்த்தால் அனைத்தும் தெரியும்.

மக்கள்

மக்கள்

இந்த பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள் அவை தூய்மையாக இருக்கிறதா, யாரேனும் உள்ளே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய புதுமையான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. கழிப்பறையில் உள்ள கண்ணாடிகள் மூலம் உள்ளே இருப்பதை வெளியே இருந்து கொண்டு பார்க்கலாம்.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. என்னாது உள்ளே இருப்பதை பார்க்கலாமா, அப்போ உள்ளே இருப்பவரின் அந்தரங்கங்களையும் பார்க்க முடியுமா என நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. ஆம்! அதில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்கள் ஜப்பானியர்கள்.

தூய்மை

தூய்மை

அதாவது கழிப்பறையை பயன்படுத்தாத போதுதான் அவை தூய்மையாக இருக்கிறதா என்பதை வெளியே இருந்து பார்க்க முடியும். யாரேனும் கழிப்பறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டால் வெளியே இருப்பவர்களால் உள்ளே இருப்பவர்களை பார்க்க முடியாது. இருட்டாக தெரியும். இதைவைத்தே உள்ளே கழிப்பறையை யாரோ பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யார் வடிவமைத்தது

யார் வடிவமைத்தது

இந்த கழிப்பறைகளை நிப்பான் பவுண்டேஷன் தொடங்கியது. இவற்றை கட்டடக் கலைஞர் ஷிகேரு பான் என்பவர் வடிவமைத்தார். இரவு நேரத்தில் இந்த டிரான்ஸ்பாரன்ட் கழிப்பறைகளில் எரியும் விளக்குகள் பூங்காவுக்கு புது அழகை கொடுக்கின்றன. மிகவும் வண்ண நிறங்களில் வெளிச்சமாக இருக்கும் இந்த கழிப்பறைகள்.

English summary
Tokyo has installed transparent washrooms in park. They are very colourful. But there is a twist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X