For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றி’

By BBC News தமிழ்
|
பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கான ஆதரவு
Getty Images
பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கான ஆதரவு

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இது ஒரு "மாபெரும் வெற்றி" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

அந்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்த நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஐந்தில் நான்கு நீதிபதிகள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த பயணத்தடையானது இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமனை சேர்ந்த பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கிறது.

டிரம்பின் பயணத்தடைக்கு
Reuters
டிரம்பின் பயணத்தடைக்கு

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, "நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சட்ட நிபுணர்களுடன் நடந்த சந்திப்பில், "நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்; பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

"இந்த தீர்ப்பு ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்புகள் தவறு என்பதை காட்டியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அனுமதியின்படி, டிசம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வரவுள்ள இந்த பயணத்தடை அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

https://twitter.com/realDonaldTrump/status/1011620271327989760

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
US President Donald Trump has hailed a Supreme Court ruling upholding his travel ban which covers people from several Muslim-majority countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X