For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் லாரி மூலம் தீவிரவாத தாக்குதல்- 9 பேர் பலி, 50 பேர் படுகாயம்

ஜெர்மனியின் பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை பகுதியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெர்லின்: கிறித்துமஸ் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் கிறித்துவர்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மார்க்கெட் போடப்பட்டிருந்தது. கைசெர் சர்ச் அருகே உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

Truck runs into Berlin's Christmas market: 9 killed 50 injured

அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி, கூட்டத்தில்குள் புகுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். என பெர்லின் நகர போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சந்தேகிப்பதாக போலீசார் கூறுகின்றனர். சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது, அங்குள்ள பல கடைகள் இடித்துத் தள்ளப்பட்டு, பலர் காயமடைந்து தரையில் கிடப்பதைக் காண முடிகிறது. சம்பவம் மிகக் குரூரமாக இருப்பதாக அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அப்பகுதியில் மீட்புக்குழுவினர், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி போலீசார் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த விபத்தை ஏற்படுத்திய, லாரி டிரைவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. டிரைவர் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அவனை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க சார்பில் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
At least nine persons were killed after a truck rammed into a crowded Christmas market in Central Berlin on Monday evening. Several others were injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X