For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்து பாடுபடுவோம் - டிரம்ப் வெற்றியுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி வாகை சூடியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தற்போதைய அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா உள்ளார். அவரது பதவிக்காலம் 2017 ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அமெரிக்காவின் 45வது புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல், அமெரிக்க நாட்டு பாரம்பரியப்படி நவம்பர் மாதம் வரும் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையான நேற்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

Trump addresses his supporters at campaign headquarters

அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். 276 வாக்குகளபை் பெற்று டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானார். அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டன் 218 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.

அரசியல் பின்புலம் அல்லாத ஒருவர் அமெரிக்க அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர்களில் மிகவும் வயதான அதிபரும் டொனால்டு டிரம்ப்பே ஆவார். இதனையடுத்து, வரும் டிசம்பர் 19ம் தேதி பிரதிநிதிகள் கூடி முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் வெற்றி பெற்ற உடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவிக்கப்பட்ட உடன் நாடு முழுவதும் உள்ள குடியரசுக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடன் தனது குடியரசுக்கட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தனது குடும்பத்தினருடன் தோன்றினார்.

தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட டிரம்ப், அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். பின்னர் பேசிய டிரம்ப் அனைவரும் இணைந்து பாடுபட்டு அமெரிக்காவை ஒற்றுமையுடன் வைத்திருப்போம் என்றார். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக தமது அரசு பாடுபடும் என்றும் டிரம்ப் கூறினார்.

தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், நாட்டுக்காக பல ஆண்டுகள் சேவை செய்தவர் என்று புகழாரம் சூட்டினார். தாம் வெற்றி பெற்ற உடன் தம்மை தொலைபேசியில் அழைத்து டிரம்ப் வாழ்த்து கூறியதாக தெரிவித்தார். உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

English summary
Trump addresses his supporters at campaign headquarters; says Clinton called to congratulate him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X