For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்... ட்ரம்ப் அரசின் முடிவால் இந்தியர்களுக்கு நெருக்கடி!

எச்1பி விசா வைத்திருப்பவர்களின் கணவனோ மனைவியோ வேலை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை அதிபர் ட்ரம்ப் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால் இந்தியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எச்1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த அதிரடி முடிவால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எச்1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்4 என்ற விசா அளிக்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உயர் பதவிகளில் இருப்பவர்களின் குடும்பத்தாருக்கு இது வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவின் கீழ் இவர்களும் பணியாற்ற முடியும் என்ற சிறப்பு அனுமதியை ஒபாமா நிர்வாகம் கொடுத்திருந்தது.

Trump administration plans to end work permits for H-1B visa spouses turns trouble for Indians

இந்திய-அமெரிக்கர்களே இந்த திட்டத்தால் அதிகம் பயன்அடைகிறார்கள். சுமார் 1 லட்சம் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
2015ம் ஆண்டு சிறப்பு உத்தரவு மூலம், வேலைக்கான அனுமதி பெற்று பணி செய்து கொள்ள ஒபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியது.

வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன் உரிமை என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் ஒபாமா நிர்வாகத்தின் முடிவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது. இதனால் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2017 ஜூன் புள்ளிவிவரப்படி, எச்1பி விசா பெற்றவர்களின் 71,287 உறவினர்கள் வேலை உத்தரவாத கடிதங்களை பெற்றனர். இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2015ம் வருடம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இதனால், பல ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "எச்4 விசா வைத்திருப்பவர்கள் பணி செய்ய, அனுமதி வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமெரிக்க குடிமகன் மற்றும் குடியேற்றத்துறை இயக்குநர் பிரான்சிஸ்.

English summary
Trump administration is planning to propose to end allowing spouses of H1-B visa holders to work legally in the US a move that could have a devastating impact on tens of thousands of Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X