For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அரசியல்வாதிகளிடம் நிதி உதவி பெற்ற ஹிலாரி... டொனால்டு ட்ரம்ப் 'பரபர' புகார்

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய அரசியல்வாதிகளிடம் இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நிதி உதவி பெற்றதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.

Trump alleges Hillary received money from Indian politicians

ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி வேட்பாளராக தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும் களத்தில் உள்ளனர். இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அரசியல் தலைவர்கள், நிதி நிறுவனங்களிடம் இருந்து ஹிலாரி கிளிண்டன் பெரும் தொகை பணம் பெற்றதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியின் மாஜி எம்பி அமர்சிங் 10,00,000 லட்சம் டாலர்கள் முதல் 50,00,000 லட்சம் டாலர்கள் வரை கிளிண்டன் குடும்ப நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அமெரிக்காவுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்கான லாபியை அப்போது அமர்சிங் முன்னெடுத்திருந்தார் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

English summary
Republican presidential nominee Donald Trump has alleged that his Democratic rival Hillary Clinton received funds from Indian political leaders and institutions in return for supporting the India-US civil nuclear deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X