For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்ரம்ப்-ரஷ்யா இடையே ரகசிய தொடர்பா? விசாரிக்கிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா நடுவேயான தொடர்பை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரிக்க உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் காமே வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் வருவதை விரும்பவில்லை என்று ஜேம்ஸ் கூறியுள்ளார். இதன்மூலம், புடினின் விருப்பம் ட்ரம்ப்தான் என்பதை மறைமுகமாக அவர் கூறியுள்ளார்.

Trump campaign, Russia's involvement being probed says FBI

ட்ரம்ப்பின் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவி செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் நிலையில், இவ்வாறு ஜேம்ஸ் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் ட்ரம்ப் நடுவே யாராவது தனி நபர் தொடர்பை ஏற்படுத்தினரா அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு இருந்ததா என்பது குறித்தெல்லாம் விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபருக்கு எதிராக அந்த நாட்டு புலனாய்வு அமைப்பே விசாரிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.

English summary
For the first time, the FBI director James Comey said that the agency is probing if there was any coordination between Donald Trump's campaign and Moscow. He said that they were probing if there was any interference by Russia in the campaign that saw Trump become President of the United States of America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X