For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது நிகழ போகிறது.. கிம்மை சந்திக்கும் டிரம்ப்.. இடம், தேதி உறுதியானது.. உலக அமைதிக்கான முதல் அடி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கிம்மை சந்திக்கும் டிரம்ப்.. இடம், தேதி உறுதியானது- வீடியோ

    நியூயார்க்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.

    சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள். இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும்.

    சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் நண்பர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வருட தொடக்கத்தில்தான் இரண்டு பேரும் அணு ஆயுதங்களை கால் பந்து போல கற்பனை பண்ணிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்வோம் என்று பேட்டி அளித்தனர். டிவிட்டரில் சண்டை போட்டனர்.ஆனால் இவர்கள் மனதை மாற்றியது எதுவோ தெரியவில்லை, தற்போது இரண்டு பேரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.

    நல்ல செய்தி

    நல்ல செய்தி

    அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இது கொஞ்சம் நெருக்கத்தை உண்டாக்கியது. அதன்பின் இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு கைதிகளை மாற்றி மாற்றி விடுவித்தனர். அமெரிக்கா முதலில், தங்கள் சிறையில் இருந்து எல்லா வடகொரியா கைதிகளையும் விடுதலை செய்தது. அதற்கு அடுத்து வடகொரியாவும் தற்போது தங்கள் சிறையில் இருக்கும் அமெரிக்க கைதிகளை விடுவித்துள்ளது. இதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கிம்மிடம் நண்பர் ஆனார்.

    பல நாள் திட்டம்

    பல நாள் திட்டம்

    இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை மறைந்து தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தேதி, இடம் சொல்லப்படாமல் இருந்தது. இந்த சந்திப்பு பெரிய அளவில் ரகசியமாக நடக்க இருந்தது. இதில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட உள்ளது.

    சிங்கப்பூரில் சந்திப்பு

    சிங்கப்பூரில் சந்திப்பு

    இந்த நிலையில் இவர் சந்திப்பு தற்போது எங்கே நடக்கிறது என்று முடிவிற்கு வந்துள்ளது. இரண்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் எந்த இடத்தில் சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க கைதிகளை வடகொரியா வெளியிட்ட பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உலக அமைதி

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிவிட் செய்துள்ளார். அதில் ''அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் நானும், கிம் ஜோங் உன்னும் சந்திக்கும் நிகழ்வு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்க உள்ளது. உலக அமைதிக்கான முக்கியமான நிகழ்வாக இதை மாற்ற முயல்வோம்'' என்றுள்ளார்.

    English summary
    Trump decides to meet Kim Jong-un on June 12 in Singapore . Trump tweets ''The highly anticipated meeting between Kim Jong Un and myself will take place in Singapore on June 12th. We will both try to make it a very special moment for World Peace!'' from his ID.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X