For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Donald Trump defends decision | சிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு-வீடியோ

    அன்காரா: துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் ஆதிக்கம் உருவாகும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிரியாவில் நடக்கும் போர் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிரியாவில் உள்ள குர்தீஷ் போராளி குழுக்கள் என்று கூறலாம். குர்தீஷ் போராளி குழு துருக்கியை பூர்வீகமாக கொண்டது.

    இவர்கள்தான் சிரியாவில் அமைதி திரும்புவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா ஜுவல்லரி கொள்ளையன் வெளியிட்ட பரபரப்பு சீக்ரெட்!சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா ஜுவல்லரி கொள்ளையன் வெளியிட்ட பரபரப்பு சீக்ரெட்!

    என்ன போர்

    என்ன போர்

    ஆம் குர்தீஷ் போராளி குழுக்களின் ஒய்பிஜி படை மற்றும் அரபு படை, அமெரிக்க படை இணைந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போர் செய்தது. சிரியாவில் ஐஎஸ் அமைப்பை இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் காலி செய்தனர். குர்தீஷ் போராளி குழுதான் இதற்கு தலைமை தாங்கியது.

    கைது செய்துள்ளனர்

    கைது செய்துள்ளனர்

    ஐஎஸ் அமைப்பை அழித்தது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஐஎஸ் தீவிரவாதிகளை குர்தீஷ் போராளி குழு கைது செய்துள்ளது. ஆனால் அருகில் இருக்கும் துருக்கி நாடு குர்தீஷ் போராளி குழுவை தீவிரவாதிகள் என்று கூறி வருகிறது. துருக்கியில் 45 வருடங்களுக்கு முன் புரட்சி செய்த குர்தீஷ் பணியாளர்கள் அமைப்பின் இன்னொரு பிரிவுதான் குர்தீஷ் போராளி குழு என்று துருக்கி கூறுகிறது.

    என்ன தீவிரவாதம்

    என்ன தீவிரவாதம்

    குர்தீஷ் போராளி குழு துருக்கியை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது. எங்களின் மண்ணை குர்தீஷ் போராளி குழு கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று துருக்கி புகார் அளித்தது. இதனால் சிரியா போர் நடந்த சமயத்தில் குர்தீஷ் போராளி குழு மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்து குழுவை அழிக்க பல வருடமாக துருக்கி முயன்று வருகிறது.

    என்ன வாபஸ்

    என்ன வாபஸ்

    இந்த நிலையில்தான் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதாவது குர்தீஷ் போராளி குழுவிற்கு கொடுத்து வந்த ராணுவ ஆதரவை வாபஸ் பெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் குர்தீஷ் போராளி குழு மீது துருக்கி ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தும்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    துருக்கி படை குர்தீஷ் போராளி குழு மீது தாக்குதல் நடத்த பல வருடமாக திட்டமிட்டு வந்தது. ஆனால் அமெரிக்க ராணுவம் இருந்ததால் அது முடியாமல் போனது. தற்போது அமெரிக்க ராணுவம் வெளியேறுவதால் குர்தீஷ் போராளி குழு மீது துருக்கி படை தீவிரமாக தாக்குதல் நடத்தும் என்று கூறுகிறார்கள்.

    ஐஎஸ் என்ன ஆகும்

    ஐஎஸ் என்ன ஆகும்

    ஆகவே குர்தீஷ் போராளி குழு கைது செய்துள்ள ஆயிரக்கணக்காக ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேறும் வாய்ப்புள்ளது. மீண்டும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் வலிமை அடைய வாய்ப்புள்ளது. இது மீண்டும் அங்கு போருக்கு வழி வகுக்கும். குர்தீஷ் போராளி குழுக்களின் அழிவில் இருந்து ஐஎஸ் அமைப்பு விஸ்வரூபம் எடுக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    English summary
    US President Trump decides to pull its troops off from the border of Syria and Turkey.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X