For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஃப்பிஐ இயக்குநரை டிஸ்மிஸ் செய்த ட்ரம்ப்... 'இன்னொரு சனிக்கிழமை இரவு படுகொலை'!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI) இயக்குநர் ஜேம்ஸ் கோமியை அதிபர் ட்ரம்ப் டிஸ்மிஸ் செய்துள்ளார். அதிபர் தேர்தலில் ரஷயாவின் தொடர்பு பற்றி கோமி விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணை வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அதிபர் ட்ரம்பின் டிஸ்மிஸ் உத்தரவு, அமெரிக்க அரசியலை புரட்டிப் போட்டுள்ளது.

Trump dismissed FBI Director

1973 ம் ஆண்டு அப்போதைய அதிபர் நிக்சன் மீது வாட்டர்கேட் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் சிறப்பு விசாரணை வழக்கறிஞராக இருந்த அர்ச்சிபால்ட் ஃபாக்ஸ் - ஐ அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார் நிக்சன்.

தன் மீதான குற்றச்சாட்டை விசாரித்த அதிகாரியை தானே டிஸ்மிஸ் செய்து வரலாற்றில் நிக்சன் இடம் பிடித்தார். சனிக்கிழமை இரவு நடந்ததால், இன்றளவும் 'சனிக்கிழமை இரவு படுகொலை' என்று அழைக்கப் படுகிறது.

Trump dismissed FBI Director

ட்ரம்பின் நேற்றைய டிஸ்மிஸ் நடவடிக்கையை வாட்டர் கேட் ஊழலுக்கு இணையானது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஹிலரி தோல்விக்கு காரணமானவர்?

அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக , ஹிலரியின் தனிப்பட்ட இமெயில் சர்வரிலிருந்து, பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட இமெயில்கள் வேண்டுமென்றே கசியவைக்கப்பட்டன என்று ஜேம்ஸ் கோமி குற்றம் சுமத்தி இருந்தார்.

காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி மீண்டும் ஹிலரியின் இமெயில் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹிலரி இமெயில் விவகாரத்தின் மீது புதிய விசாரணை தேவையில்லை என்று ஜேம்ஸ் கோமியின் தலைமையில் இயங்கிய FBI முடித்து வைத்தது.

Trump dismissed FBI Director

இடைப்பட்ட நாட்களில் ஹிலரியின் செல்வாக்கு மளமளவென்று சரிந்து ட்ரம்பிடம் தோல்வியடைந்தார். தனது தோல்விக்கு ஜேம்ஸ் கோமியின் கடிதம் முக்கிய காரணம் என்று ஹிலரி தெரிவித்து இருந்தார்.

ஒபாமாவால் நியமிக்கப்பட்டிருந்தாலும், ஹிலரிக்கு எதிராகவும், ட்ரம்புக்கு ஆதரவாகவும் அவருடைய நடவடிக்கை இருந்தது என்பது பட்டவர்த்தமான ஒன்றாகும்.

முதலுக்கே மோசமாகிடுமோ?

தேர்தல் நேரத்தில் தனக்கு மறைமுகமாக உதவிய செய்தவரையே ட்ரம்ப் தற்போது டிஸ்மிஸ் செய்துள்ளார். ஜேம்ஸ் கோமியின் ரஷ்ய தலையீடு விவகாரத்தில் ட்ரம்ப் தேர்தல் குழுவுக்கு தொடர்பு இருந்தது என்று தெரிய வந்தால், அமெரிக்கா மாபெரும் சட்டச் சிக்கலை எதிர்கொள்ளும். எப்படிப் பார்த்தாலும் அதிபர் ட்ரம்ப் பதவி விலக வேண்டி வரும்.

விசாரணை அதிகாரியையே மாற்றி விட்டால், போக்கு மாறிவிடாதா? ட்ரம்பின் டிஸ்மிஸ் உத்தரவை எதிர்க்கட்சியினர் இப்படித்தான் பார்க்கின்றனர். ட்ரம்ப் நியமிக்கும் புதிய FBI இயக்குvர், அவருக்கு சாதகமாகவே விசாரணையை தொடர்வார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

தான் தொடர்புடைய குற்றச்சாட்டை விசாரிக்கும் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய அதிபருக்கு அதிகாரம் இல்லை. அது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பது அவர்களின் வாதம்.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரும் ஜேம்ஸ் கோமி டிஸ்மிஸ் செய்யப்பட்ட நேரம் சரியானது அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். மூத்த செனட்டர் ஜான் மெக்கெய்ன், ரஷ்ய தலையீடு பற்றி காங்கிரஸ் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் அதிரடி டிஸ்மிஸ் உத்தரவு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

-இர தினகர்

English summary
President Trump dismissed FBI director James Comey on an unexpected move. Comey was investigating the links of Russia during presidential election.Opposition leaders asked to nominate an independent prosecutor to continue the investigation Comey left in the middle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X