For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதம் என்ன ஃபுட்பாலா?.. செத்து செத்து விளையாட அழைக்கும் டிரம்ப் & கிம்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் அணு ஆயுத சக்தி யாருக்கு அதிகம் என்று சண்டையிட்டு வருகின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு புத்தாண்டை எப்படி எல்லாம் ஆரம்பிக்க கூடாதோ அப்படி எல்லாம் தொடங்கி இருக்கிறது அமெரிக்காவும், வடகொரியாவும். அமெரிக்க அதிபர் தன்னுடைய முதல் டிவிட்டிலேயே பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வெறுப்பை வெளிப்படுத்தினார்.

வட கொரிய அதிபர் கிம் தன் பங்கிற்கு அமெரிக்காவை வம்பிற்கு இழுத்தார். 'ஒத்த சுவிட்சுதான் அழுத்தினா 500 கிலோ மீட்டர் காலி ஆகிடும்'' என்று வடிவேல் கணக்காக அமெரிக்காவிற்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்தார்.

இதை உலக மக்கள் அனைவரும் சர்க்கஸ் ஜோக்கர் காமெடி போல பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு பின் நடக்க போகும் ஆபத்துக்களும், அரசியல் மாற்றங்களும் இப்போதே வயிற்றுக்குள் ஹைட்ரஜன் பாமை வெடிக்க வைக்கிறது.

பட்டன் இருக்கு

பட்டன் இருக்கு

புத்தாண்டு அன்று காலை அமெரிக்க இறக்குமதி உடையில் மங்களகரமாக தொலைக்காட்சியில் பேசிய கிம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். அவர் தனது பேச்சில் ''நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்துவிட்டோம். என்னுடைய மேசை மீது ஒரு ஸ்விட்ச் பொருத்தி வைத்து இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் என்னால் தாக்க முடியும். நான் நினைக்கும் போது அமெரிக்கவை தாக்க முடியும்'' என்று தன் குழந்தை முகத்துடன் பேசினார்.

பெரிய பட்டன்

இதற்கு டிரம்ப் என்ன எதிர்வினையாற்றுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதைவிட பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அவர் தனது டிவிட்டில் ''கிம் அவருடைய மேசையில் அணு ஆயுத பட்டன் இருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது. அந்த பட்டன் உங்களுடையதை விட பெரிதாக இருக்கும், அதைவிட சக்தியும் அதிகமாக இருக்கும். முக்கியமாக அது வேலை செய்யும்'' என்று குறிப்பிட்டார்.

பிரச்சனை ஆனது

பிரச்சனை ஆனது

டிவிட்டரில் இவர்களது சண்டை 'சாக்லெட்டிற்கு அடித்துக்கொள்ளும்' பங்காளிகள் சண்டை போலத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் கிம் தற்போது செயலில் இறங்கி இருக்கிறார். அதன்படி வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு வடகொரியாவின் 'ஹாட் லைன்' சேவையும் உருவாக்கப்பட்டு நொடிக்கு நொடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மல்லுக்கட்டும் அமெரிக்கா

மல்லுக்கட்டும் அமெரிக்கா

வடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ''அமெரிக்காவை யாரும் ஏமாற்றம் முடியாது. அதேபோல அமெரிக்காவை வடகொரியா ஒன்றுமே செய்துவிட முடியாது. அவர்களைவிட ராணுவ பலம் எங்களிடம் அதிகமாக இருக்கிறது. எங்களை யாராலும் பயமுறுத்த முடியாது'' என்று பதில் அளித்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் அணு ஆயுத போட்டியுடன் தொடங்கி இருக்கிறது என்று கூறலாம்.

English summary
North Korean President Kim Jong-Un says that ''I have nuclear launch button on my table'' he also added that he will launch atomic bomb anywhere at any time. Trump tweets 'North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button, but it is a much bigger & more powerful one than his, and my Button works'. After this tweet Kim reopens the border hot line near North Korea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X