For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 மாதத்திற்கு முன்பே ஓகே சொன்ன டிரம்ப்.. ஸ்கெட்ச் போட்ட சிஐஏ.. சுலைமானி கொலையின் பரபர பின்னணி!

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியை கொலை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 மாதத்திற்கு முன்பே அனுமதி வழங்கி விட்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியை கொலை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 மாதத்திற்கு முன்பே அனுமதி வழங்கி விட்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர். அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் உடன் சண்டை.. இந்தியா பக்கம் கவனத்தை திருப்பும் டிரம்ப்.. 4 வாரத்தில் மோடியை சந்திக்க திட்டம்! ஈரான் உடன் சண்டை.. இந்தியா பக்கம் கவனத்தை திருப்பும் டிரம்ப்.. 4 வாரத்தில் மோடியை சந்திக்க திட்டம்!

என்ன எப்போது

என்ன எப்போது

இந்த நிலையில் சுலைமானி கொலைக்கு டிரம்ப் கடந்த வருடம் ஜூன் மாதமே ஒப்புதல் வழங்குவிட்டார் என்கிறார்கள். அதன்பின் சுலைமானியை கொலை செய்ய அமெரிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வந்தது. இதற்கு சரியான தருணம் கிடைக்காமல் இருந்தது. அதனால்தான் கொலை செய்ய 7 மாதம் ஆனது என்கிறார்கள்.

சிஐஏ உளவாளிகள்

சிஐஏ உளவாளிகள்

இவரை சிஐஏ உளவாளிகள் தீவிரவமாக கண்காணித்து வந்தனர். சுலைமானி எங்கெல்லாம் செல்கிறார். யாரை எல்லாம் சந்திக்கிறார் என்று மிக தீவிரமாக கணித்து வந்துள்ளனர். அவரின் கடந்த 7 மாத காலண்டரை மொத்தமாக அமெரிக்க ராணுவம் கரைத்து குடித்துள்ளது.

ஈராக் எப்படி

ஈராக் எப்படி

அதன்பின்தான் ஈராக்கில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள பாக்தாத்திற்கு சுலைமானி செல்வார் என்று ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்க ராணுவத்திற்கு தெரிந்துள்ளது. இதனால் அங்கு ஏற்கனவே டிரோன் விமானத்தை அனுப்பி, சோதனைகளை செய்துள்ளனர்.

உளவு பார்த்தனர்

உளவு பார்த்தனர்

அதன்பின்தான் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம், சுலைமானியை அமெரிக்கா சுட்டுக் கொன்றது. 7 மாதமாக திட்டம் போட்டு, மிக கட்சிதமாக ஸ்கெட்ச் போட்டு இதை செய்து முடித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். பென்டகனில் பணியாற்றும் முக்கிய பணியாளர்கள் பலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

பொய்யா இது?

பொய்யா இது?

சுலைமானி பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை தாக்க சென்றார். அதனால்தான் அவரை கொலை செய்தோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்போது இது 7 மாத பிளான் என்ற உண்மை வெளியாகி இருப்பதால், டிரம்ப் சொல்வது பொய்யா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
The USA president Trump nodded his head for killing Soleimani 7 months ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X