For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100000த்தை நெருங்கும் மரணம்.. அமெரிக்க தேசிய கொடியை 3 நாள் அரைகம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா நோயால் இறந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்க கொடிகளை மூன்று நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 96354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 28,1179 பேருக்கு தொற்று பரவி இருப்பதால் மீண்டும் கவலை அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1418 ஆக இருந்தது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 16 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Trump ordered US flags to be lowered to half-staff for three days for COVID-19 victims

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்க உள்ள நிலையில். அந்தக் கொடூரமான மைல்கல்லை எட்டும்போது அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

இந்திய சீனா எல்லை பிரச்சனை.. அமெரிக்காவின் கருத்து முட்டாள்தனமான செயல்.. சீனா கொதிப்புஇந்திய சீனா எல்லை பிரச்சனை.. அமெரிக்காவின் கருத்து முட்டாள்தனமான செயல்.. சீனா கொதிப்பு

இதையடுத்து டிரம்ப் வெளியிட்ட ட்வீட் பதிவில், "கொரோனா வைரஸிடம் நாங்கள் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து அமெரிக்க அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் உள்ள அமெரிக்க கொடிகளை அரை கம்பபத்தில் பறக்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியபோது இறந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசிய தினத்திற்காக திங்களன்று கொடிகள் அரை கம்பத்தில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

English summary
President Donald Trump ordered US flags to be lowered to half-staff for three days for COVID-19 victims
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X