For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா-சீனா நடுவே வெடித்தது பொருளாதார போர்! 'திருட்டு சீனா' என ட்ரம்ப் கோபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 34 பில்லியன் டாலர்களை வரியாக விதித்து வருகிறது. இந்த வரி விதிப்பை 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகள் நடுவே பொருளாதார போர் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசு, சீனா மீதான பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகள் ராபர்ட் லைடைசர் நேற்று வெளியிட்ட ஒரு பட்டியலில், பழங்கள் காய்கறிகள் கீரைகள் காய்கறிகள் மழை ஜாக்கெட்டுகள் மற்றும் பேஸ்பால் கையுறைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 10 சதவீத வரியை அதிகரித்து இருந்தார்.

சீனா பதிலடி

சீனா பதிலடி

34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25% வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதற்குப் பதிலடியாக உடனடியாக சுமார் அதே அளவு அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது சீனா.

இன்னும் அதிகரிக்க முடிவு

இன்னும் அதிகரிக்க முடிவு

இப்படி இரு வல்லரசுகளும் பொருளாதார மோதலில் இறங்கியுள்ள நிலையில், சீன பொருட்கள் மீதான, வரி விதிப்பை 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான பொருட்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், ராபர்ட் லைடைசருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளாராம்.

திருடும் சீனா

திருடும் சீனா

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி அதை தனது உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது என்பது டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டு. சீனா தனது மோசமான நடவடிக்கையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை, "அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமைகளை திருடுவது மட்டுமின்றி, அமெரிக்க கம்பெனிகள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டும் வகையில் நடந்து கொள்கிறது" என்று குற்றம்சாட்டுகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

சீனாவின் கோபம்

சீனாவின் கோபம்

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கார்கள் மற்றும் முக்கியமான விவசாய பொருட்களான சோயா பீன்ஸ், மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மீதான வரியை அதிகரித்து இருந்தது சீனா. இதனிடையே சீன நாட்டு வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவின் செயல்பாடு, சீனாவையும் மொத்த உலகத்தையும், ஏன் அமெரிக்காவையுமே பாதிப்படையச் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

English summary
The Trump administration is preparing another round of tariffs on Chinese goods worth $200 billion, ramping up the US-China trade war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X