For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு லட்சம் விசாக்களுக்கு தடை விதித்தார் ட்ரம்ப்... க்ரீன்கார்டுக்காரர்கள் தப்பித்தார்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அதிபர் ட்ரம்பின் அரசு ஆணைப் படி 7 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்காவுக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்ப்ட்டுள்ளது. இந்த ஆணையின்படி இது வரையிலும் ஒரு லட்சம் விசாக்கள் தடை செய்யப்பட்டிருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.

வர்ஜீனியா மாநிலத்தில்லுள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் குடியுரிமை தடை ஆணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது., வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையதில் 7 நாடுகளைச் சார்ந்தவர்களை அனுமதிக்க மறுப்பதை குறிப்பிட்டு இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

Trump revoked 1 lakh visas

நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த அரசு வக்கீல் 1 லட்சம் விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். பின்னர் சி.என். என் தொலைக்காட்சிக்கு பதில் அளிக்கையில் 60 ஆயிரத்திற்கும் குறைவான விசாக்களே தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும், அவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறியுள்ளார். க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களை அனுமதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக் குறிப்பு மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இது வரையிலும் அனுமதி மறுக்கப்பட்டவர்களின் பெயர் உட்பட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி ப்ரிங்கேமா அரசு தரப்பினரிடம் கேட்டுள்ளார். பொதுமக்கள் இப்படி கும்பல் கும்பலாக எந்த ஒரு வழக்கிலும் தாக்கல் செய்வதை, எனது நீதிமன்ற காலத்தில் பார்த்ததில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Government lawyer replied to a question in Virginia US District court, told one lakh Visas have been revoked since the presidential executive order on immigrants ban. He later told CNN that less than 60 thousands visas only revoked. He further told Green Card holders are allowed to enter US with no restrictions and White House has instructed officials accordingly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X