For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிலரிக்கு "டோப்" டெஸ்ட் செய்ய வேண்டும்.. ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு!

By Shankar
Google Oneindia Tamil News

போர்ட்ஸ்மௌத்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் கடைசி விவாதம், அக்டோபர் 19, புதன்கிழமை லாஸ் வேகஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்னால் ஹிலரி க்ளிண்டனுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யவேண்டும். சோதனைக்கு நான் தயாராக உள்ளேன் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆச்சரியங்கள் நிறைந்த அதிபர் தேர்தல்

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் ஏகப்பட்டஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்ததாக உள்ளது. 250 வருட அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பெண் வேட்பாளர், பெரிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அது வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாகவும் இருந்த ஹிலரி க்ளிண்டன் என்பது இன்னொரு ஆச்சரியம்.

Trump's new allegation on Hillary

குடியரசுக் கட்சியில் , இதுவரை எந்த அரசியல் பதவிக்கும் போட்டியிடாத பெரும் பணக்காரர் டொனால்ட் ட்ரம்ப், கட்சி ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதிபர் வேட்பாளர் ஆகிவிட்டார். டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ, ஜெப் புஷ், க்ரிஸ் க்ரிஸ்டி, ஜான் கேசிக் என செனட்டர்கள், கவர்னர்களை உட்கட்சி தேர்தலில் ஜஸ்ட் லைக் தட் ஆக தோற்கடித்தார்.

உட்கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்றாலும், கட்சி மாநாட்டில் அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு, நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. முடிவு வேறு மாதிரி இருந்தால் களேபரம் ஆகிவிடும் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே எச்சரித்து இருந்தார். உள்ளுக்குள் எதிர்ப்பு இருந்தாலும், வெளியில், கட்சித் தலைவர்கள் ட்ரம்பை வேட்பாளராக ஏற்று ஆதரவு தெரிவித்தனர்.

முன்னெப்போதும் காணாத காட்சிகள்

பில் க்ளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்களுக்கு பெண்கள் விவகாரத்தில் சறுக்கல்கள் இருந்தாலும், அதிபர் ஆவதற்கு முன்னால் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தது இல்லை.

தவிர எந்த அதிபர் வேட்பாளரும் பெண்களை அவதூறாக பேசிய விவகாரங்கள் வெளி வந்தது இல்லை.

கிட்டத்தட்ட ப்ளேபாய் ரேஞ்சுக்கு, பெண்கள் குறித்த ட்ரம்பின் அவதூறு வீடியோ, ரேடியோ பேச்சுகள் மிகவும் வக்கிரமாக உள்ளன. ஒரு அதிபருக்கு இத்தகைய பின்னணி இருந்தால் எப்படி என்ற கேள்வி தான் கட்சி சாராதவர்கள், பெண்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது/

ஹிலரி க்ளிண்டன் மீது இமெயில் விவகாரம், பெங்காஸி விவகாரத்தை திறமையாகக் கையாளாதது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும் ஹிலரி வெளிப்படைத் தன்மை இல்லாதவர், வால்ஸ்ட்ரீட் முதலாளிகளுக்கு வேண்டியவர் என்ற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன.

ஹிலரியின் உடல் நலம் குறித்தும் சந்தேகங்கள் கிளம்புகின்றன. இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு நாளில், ஹிலரி மயக்கமடைந்தார். அது குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்காததால் சந்தேகம் வலுப்பெற்றது.

ஊக்கமருந்து சோதனை வேண்டும்!

உச்சக் கட்டமாக இரண்டாவது விவாதத்தில் ஹிலரி ஊக்க மருந்து உட்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சுறுசுறுபபாக இருந்தவர், பின்னர் களைப்படைந்து, காரில் ஏறிச் செல்லக்கூட முடியாதவராகி விட்டார் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜான் கென்னடி முன்னர் உட்கொண்டது போல் என்று சாட்சிக்கு பழைய வரலாற்றையும் இழுத்துள்ளார்.

மூன்றாவதும் கடைசியுமான புதன்கிழமை விவாதத்திற்கு முன்னால், ஊக்க மருந்து சோதனை செய்யவேண்டும். சோதனைக்கு உட்பட நான் தயார். ஹிலரிக்கும் ஊக்க மருந்து சோதனை செய்ய வேண்டும்.

இன்னொரு பக்கம் சொந்த கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார் ட்ரம்ப். ஊடகங்கள் உட்பட அனைவரும் சேர்ந்து கொண்டு அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்கின்றனர். ஹிலரிக்கு சாதகமாக அனைத்து மட்டத்திலும் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவை ஹிலரிக்கு திருப்பும் முயற்சியை அவரது குழுவினர் செய்து வருகின்றனர். தேர்தல் நாயகியாக மிஷல் ஒபாமா உருவெடுத்துள்ளார். ட்ரம்ப் பெயரைச் சொல்லாமலே அவர் செய்து வரும் பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதல் பெண்மணியின் தேர்தல் பிரச்சாரம் முக்கிய பங்காற்றுகிறது.

நாள் தோறும் நடந்து வரும் தேர்தல் கூத்துக்களைப் பார்த்து நடு நிலை வாக்காளர்கள் விரக்த்தியின் உச்சிக்கு போயுளள்னர். வாக்களிக்க வருவார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

கடைசியில், ஊக்க மருந்து சோதனை என்றெல்லாம் கேட்டு, அதிபர் தேர்தல் விவாதத்தை ஸ்போர்ட்ஸ் சானல் ஸ்பான்ஸர்ஸ் நிகழ்ச்சி ரேஞ்சுக்கு கொண்டு நிறுத்திவிட்டார் ட்ரம்ப்.

-இர தினகர்

English summary
US Presidential candidate Donald Turmp alleged that his opponent Hillary Clinton took drugs before the second debate. He is demanding drug test before the third and final debate to be held in Nevada on Wednesday. This election has seen many first times during the campaign. First Lady’s role in the election is commendable compare to prior years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X