For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாகேர் காப்பீடு திட்டத்தை முடக்க வேண்டாம்... ட்ரம்புக்கு வாக்களித்தவர் கோரிக்கை!

By Shankar
Google Oneindia Tamil News

வெஸ்ட் பாம் பீச்(யு.எஸ்): ஃப்ளோரிடாவைச் சார்ந்த குடியரசுக் கட்சியின் தொண்டரும், ட்ரம்புக்கு வாக்களித்தவருமான பாப் ரஸ்கோ, ஓபாமாவின் மருத்துவக் காப்பீடு திட்டம் வேண்டும். அதை முடக்காதீர்கள் என்று சி.என்.என் தொலைக்காட்சி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் ஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியின் முக்கிய சாதனையாக விளங்குவது ஒபாமாகேர் என்றழைக்கப்படும் மருத்துவக் காப்பீடு திட்டமாகும். இதன் மூலம் லட்சக் கணக்கான சாமானிய மக்களுக்கு மருத்தவக் காப்பீடு கிடைக்க வழி செய்யப்பட்டது.

Trump's supporter urges not to cancel Obamacare!

முன்னதாக வியாதி இருந்தால் மறுக்கப்பட்டவர்களுக்கும் ஒபாமகேர் முலம் காப்பீடு கிடைத்தது. ஆனால் குடியரசுக் கட்சியினரோ, இதனால் அரசுக்கு இழப்பு, மக்களுக்கும் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்து வந்தனர். தேர்தல் நேரத்தில் ஒபாமகேர் திட்டத்தை முடக்குவோம். பதிலாக வேறு திட்டத்டைக் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தனர்.

தற்போது ஆட்சியும், பாராளுமன்ற இரு அவைகளின் மெஜாரிட்டியும் இருப்பதால் முதல் வேலையாக ஒபாமாகேர் திட்டத்தை முடக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர்.

பூமராங் ஆக திரும்பும்

கட்சி சாராத வல்லுனர்களோ, ஒபாமாகேர் திட்டத்தின் மூலம் பல சீரமைப்புகள் நடந்துள்ளன. சாமனிய மக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நல்ல பலன்கள் உண்டு. குறிப்பாக காப்பீடு நிறுவனங்கள், மருத்துவமனை, மருத்துவர்களை கட்டுக்குள் கொண்டுவரும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியது. பல தசாப்தங்களாக கிடப்பில் கிடந்த மருத்துவத்துறை சீர்திருத்தங்கள் இந்த திட்டம் மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

முதலில் ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெறுவதுதான் எனது முதல் வேலை என்று அறைகூவிய ட்ரம்ப் தற்போது சற்று அடக்கி வாசிக்கிறார். தனது கட்சி அவை உறுப்பினர்களை கவனமாக செயல்படுமாறு கூறியுள்ளார்.

காப்பீட்டுத் திட்டத்தில் கை வைத்தால் மக்களை நேரடியாக பலவகையிலும் பாதிக்கும். மக்கள் அரசுக்கு எதிராக கொந்தளிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஆகையால் மாற்றுத் திட்டத்தை முதலில் முன் வையுங்கள் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

8 ஆண்டுகளாக எதிர்த்து வந்த திட்டத்தை உடனடியாக தூக்கி விட வேண்டும் என்று பால் ரயன் உள்ளிட்ட குடியரசுக் கட்சியினர் துடியாகத் துடிக்கின்றனர்.

விடாதீர்கள் ...ஒரு கை பார்க்கலாம்

ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலம் ஒபாமா சகாப்தத்தை இல்லை என்று ஆக்கி விடுவதுதான் குடியரசுக் கட்சியினரின் நோக்கமாகும். அதை நன்கு உணர்ந்த ஒபாமா, தனது கட்சி அவை உறுப்பினர்களிடம், மாற்றுத் திட்டத்தை அவையில் நிறைவேற்ற விடாதீர்கள்.

ஒபாமாகேர் திட்டத்தைல் கூடுதல் அம்சங்கள் சேர்த்து அதை ட்ரம்ப்கேர் என்று வேண்டுமானாலும் அழைக்கட்டும். ஆனால் மாற்றுத் திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய திட்டத்தை வாபஸ் பெற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். வேண்டுமென்றால் ட்ரம்ப் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளட்டும். மக்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்று ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

60 செனட் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடுதான் புதிய திட்டட்தை அமல்படுத்த முடியும். ஜனநாயகக் கட்சியினரும் ஆதரவளித்தால்தான் அது நிறைவேறும். அதனால்தான் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒபாமா.

ஒருவேளை மாற்றுத் திட்டத்தைக் கொண்டுவர முடியாமல், ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெற்றால், மக்களின் கொந்தளிப்பு ட்ரம்புக்கு எதிராகவே திரும்பும். அடுத்த இடைத்தேர்தலில் செனட், காங்கிரஸ் அவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

திடீர் திருப்பம்

தேர்தலில் தனது கட்சியின் செயல்பாட்டை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் ஒபாமா. அப்போது ஒபாமகேர் திட்டத்தால் பலனடைந்தவர்கள் ட்ரம்புக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களுடைய வாக்குகளைப் பெற ஜனநாயகக் கட்சி தவறி விட்டது என்று கூறி இருந்தார்.

அவரது வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஃப்ளோரிடாவின் பாப் ரஸ்கோவின் சிஎன்என் பேட்டி அமைந்துள்ளது.

தீவிர குடியரசுக் கட்சிக்காரரான பாப், ஒபாமாகேர் திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்று பலன் அடைந்துள்ளார்.

எனது சுயநலம் மட்டும் என்று பார்த்திருந்தால் ஹிலரி க்ளிண்டனுக்குத் தான் வாக்களித்து இருக்க வேண்டும். ஒபாமாவின் திட்டத்தால் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்துள்ளேன். அவரது கட்சிக்கு வாக்களித்தால்தான் இந்த திட்டம் தொடர வாய்ப்புண்டு என்று நன்றாகவே தெரியும்.

கட்சிக்கு துரோகம் செய்வதா? கிடைத்த உதவிக்கு விசுவாசமாக இருப்பதா என்று குழப்பமாக இருந்தது. கட்சி விசுவாசத்தில் ட்ரம்புக்கு வாக்களித்தேன். ஆனாலும் ஒபாமாகேர் திட்டத்தை கைவிட மாட்டார்கள் என நம்பினேன்.

தற்போதைய் சூழல் அப்படித் தெரியவில்லை. ஆகையால் புதிய அதிபர் ட்ரம்புக்கு ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெறக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ட்ரம்பின் சொந்தக் கட்சிக்காரரே ஒபாமாவுக்கு ஆதரவாக பேசியுள்ளது வாஷிங்டன் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

-இர தினகர்

English summary
Republican Party member Bob Ruscoe of Florida who voted for Trump asks not to repeal Obama Care, a signature health care plan implemented by Obama. On the political side, Obama has asked his party senators and house representatives not to support alternative plan for Obamacare. Let them make amendments with additional features and call it as Trumpcare but not repeal it. If the plan is repealed, it is expected to create chaos in the health care sector and put people in to huge burden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X