For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவை ஆதரிக்கிறியா, உள்ளே வா.. இல்லாட்டி வராதே... டிரம்ப் அடாவடி

அமெரிக்காவை ஆழ்ந்து நேசிப்பவர்களுக்கும் அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் வருவதை முற்றிலும் தடை செய்யும் உத்தரவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நாள் முதலே டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்த்லில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்த வெற்றி பெற்றார்.

Trump signs in a new order to Protection Of The Nation From Foreign Terrorist Entry Into The United States

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த 20ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான குடியேற்றங்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் வருவதை முற்றிலும் தடை செய்யும் உத்தரவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பெண்டகனில் பேசிய அவர், அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் நடவடிக்கையை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவை ஆழ்ந்து நேசிப்பவர்களுக்கும் அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். அதிபர் டிரம்பின் நடவடிக்கை மூலம் அகதிகளுக்கும், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அடுத்த 90 நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது எனன அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அந்த 7 இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் அமெரிக்காவிற்கு வர கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

English summary
US President Trump signs in a new order to Protection Of The Nation From Foreign Terrorist Entry Into The United States. The order bars all persons from certain terror-prone countries from entering the United States for 90 days and suspends the US Refugee Admissions Program for 120 days until it is reinstated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X