For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிரடி திருப்பம்.. தைவான் அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் போனில் ஆலோசனை.. சீனா அதிர்ச்சி!

நீண்டகால கொள்கைக்கு எதிராக தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நியுயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் பல ஆண்டுகால அமெரிக்க கொள்கைக்கு எதிராக தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் பேச்சு நடத்தியது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் டொனால்டு ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பேசினார்.

அப்போது தைவானுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றில் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

 வாழ்த்து

வாழ்த்து

இவ்வாண்டு தொடக்கத்தில் தைவான் அதிபராக தேர்வான சாய் இங்வென்னுக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். ஆனால், இவர்களில் யார் முதலில் தொலைபேசியில் அழைத்தார்கள் என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

 கொள்கை மாற்றம்

கொள்கை மாற்றம்

இருப்பினும், தைவான் அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் பேச்சு நடத்தியது அமெரிக்காவில் கொள்கை மாற்றம் ஏற்படும் வாய்ப்பினை எடுத்துக்காட்டவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று அந்நாடு தெரிவித்து வருகிறது.

 சீனா ஆக்கிரமிப்பு

சீனா ஆக்கிரமிப்பு

மேலும், பெய்ஜிங் விதிப்படி தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முட்டுக் கட்டையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசி இருப்பது சீனாவுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

 சீனா அதிர்ச்சி

சீனா அதிர்ச்சி

எனவே சீனா-அமெரிக்கா இடையேயான பிளவு மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 1979-ம் ஆண்டு தைவானுடன் ராஜங்க ரீதியிலான உறவை அமெரிக்கா துண்டித்தது. இந்நிலையில், ஒரே சீனா என்ற கொள்கையை தைவான் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், புதிய தைவான் அரசுடன் அனைத்து தொடர்புகளையும் சீனா துண்டித்துவிட்டதாகவும் அந்த நாடு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டிருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசியிருப்பது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

English summary
NEW YORK: President-elect Donald Trump broke with decades of US diplomatic policy Friday and spoke with President Tsai Ing-wen of Taiwan, at the risk of provoking a serious rift with China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X