For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சண்டை போட்றவங்களே.. நிப்பாட்டிட்டு இங்க வந்து பாருங்க.. "குழந்தை"யைப் பாராட்டுகிறார் டிரம்ப்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    'குழந்தை'யைப் பாராட்டுகிறார் டிரம்ப்!-வீடியோ

    நியூயார்க்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் தோஸ்த் படா தோஸ்தாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வருட தொடக்கத்தில்தான் இரண்டு பேரும் அணு ஆயுதங்களை கால் பந்து போல கற்பனை பண்ணிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்வோம் என்று பேட்டி அளித்தனர். டிவிட்டரில் சண்டை போட்டனர்.

    ஆனால் இவர்கள் மனதை மாற்றியது எதுவோ தெரியவில்லை, தற்போது இரண்டு பேரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். இன்னும் சில நாட்களில் இவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.

    அணு ஆயுதத்தை கைவிட முடிவு

    அணு ஆயுதத்தை கைவிட முடிவு

    அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. அதன்படி இனி புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த கூடாது, ஆணு ஆயுத தயாரிப்பு செய்ய கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள இருக்கிறார்கள். அமெரிக்காவிடம் இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அவர்களின் இந்த முடிவை தொடர்ந்து கொஞ்சம் அமெரிக்காவுடன் நெருக்கமாகியுள்ளனர்.

    சந்திக்க போகிறார்கள்

    சந்திக்க போகிறார்கள்

    இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை மறைந்து தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தேதி, இடம் இன்னும் குறிக்கப்படவில்லை. இந்த சந்திப்பு பெரிய அளவில் ரகசியமாக நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட உள்ளது.

    பரஸ்பர விடுதலை

    பரஸ்பர விடுதலை

    இதற்கு முன்னோட்டமாக இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு கைதிகளை மாற்றி மாற்றி விடுவித்தனர். அமெரிக்கா முதலில், தங்கள் சிறையில் இருந்து எல்லா வடகொரியா கைதிகளையும் விடுதலை செய்தது. அதற்கு அடுத்த வடகொரியாவும் தற்போது தங்கள் சிறையில் இருக்கும் அமெரிக்க கைதிகளை விடுவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டனர்.

    நன்றி தெரிவித்தார்

    நன்றி தெரிவித்தார்

    அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் விமான நிலையத்திற்கே சென்று இருந்தார். ஆச்சர்யமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் ''கிம்மிற்கு அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த முடிவு வரவேற்கதக்கது. அமெரிக்காவும் வடகொரியாவும் இப்போதும் புதிய உறவில் இருக்கிறது. இரண்டு நாட்டு மக்களுக்கும் இது நன்மை பயக்கும்'' என்று கூறியுள்ளார்.

    English summary
    Trump thanks Kim Jong-un for his decision on release of Korean-Americans. He also wanted to thank him on behalf of all US citizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X