For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ இந்தியில் பேசி இந்தியர்களை வளைக்க ட்ரம்ப் முயற்சி!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): 'அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று இந்தியில் பேசி அமெரிக்க இந்தியர்களுக்கு வலை வீசியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

30 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தை ட்ரம்ப் தரப்பு வெளியிட்டுள்ளார்கள். 'ஹேப்பி திவாளி' என்று வார்த்தைகளுடனும் இந்திய இசையுடனும் அறிமுகமாகும் வீடியோவில், முதலில் குத்து விளக்கு ஏற்றுவது போல் ட்ரம்ப் தோன்றுகிறார்.

'இந்து மற்றும் இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நல்ல நண்பன் கிடைப்பார். மும்பை தீவிரவாத தாக்குதல் படத்தின் பின்னணியில், இஸ்லாமிய தீவிரவாத்தை ஒழிப்போம் இந்திய பிரதமர் மோடியுடன் (படத்தைக் காட்டுகிறார்கள்) இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்,' என்று விளம்பரத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து 'Great For America' , ' Great for US - India Relationship' என்ற முழக்கம் திரையில் தோன்றுகிறது.

We Love Hindus We love India என்று இறுதியாக கூறி, இந்த விளம்பரம் அவருடைய ஒப்புதலுடன் ஒளிபரப்பாகிறது என்று முடிக்கிறார்.

ஜீ யுஎஸ்ஏ மற்றும் டிவி ஏசியா தொலைக்காட்சிகளில், ஒரு நாளைக்கு இருபது தடவைக்கும் மேலாக இந்த விளம்பரம் ஒளிபரப்பாகிறது.

இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி?

அமெரிக்க இந்தியர்கள் பொதுவாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களாக அறியப்படுகிறார்கள். பில் க்ளிண்டன் ஆட்சியில்தான் இந்திய அமெரிக்க உறவு மேம்படத் தொடங்கியது. அவர் மீதும், ஹிலரி க்ளிண்டன் மீதும் இந்தியர்கள் நன்மதிப்பு கொண்டுள்ளார்கள்.

பிரதமர் மோடியின் தேர்தல் மற்றும் ஆட்சிக்கு பிறகு ,அமெரிக்காவிலும் இந்துத்துவா குரல்கள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. ட்ரம்ப் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்ப்பேன் என்று கூறியதால், இந்துத்துவா கொள்கை கொண்ட அமெரிக்கர்கள் அவர் பின் திரள ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க இந்தியர்களும் காங்கிரஸ் - பாஜக என கோஷ்டி பிரிந்து ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி இந்த நடவடிக்கைகள் இருப்பதால், பெரும்பானமையான அமெரிக்க இந்தியர்கள் ட்ரம்புக்கு ஆதரவு அளிக்க முன்வர மாட்டார்கள் என நம்பப்படுகிறது.

மோடியின் பாணியில் 'அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று சொன்ன ட்ரம்ப் அடுத்ததாக, வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அமெரிக்க டாலர்களை மீட்டு ஆளுக்கு பத்தாயிரம் டாலர் தருவேன் என்று சொல்வாரோ?

வீடியோ:

English summary
Republican Presidential candidate Donald Trump has released an advertisement targeting American Hindu Indians. In the 30 second ad, he says looking forward to work with Indian Prime Minister Modi, Hindus and Indians will have true friend in White House. The ad starts with Indian music in the background with Happy Diwali and being aired in ZeeTV USA and TV Asia channels more than 20 times a day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X