For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘அனகோண்டா உண்மைதானாம்.. ஆனா’.. எதையுமே பார்த்ததும் நம்பி ஏமாந்துடாதீங்க மக்கா!

Google Oneindia Tamil News

பிரேசிலியா:சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் 50 அடி நீள அனகோண்டாவின் வீடியோ குறித்த உண்மைதன்மை தெரியவந்துள்ளது.

ஐந்து தலை நாகம், பத்து கை குரங்கு என பல வீடியோக்கள் இணையத்தில் திடீரென உலா வருவது வழக்கமானது. ஆனால் அதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் உறுதியாகக் கூற முடிவதில்லை. இதுபோன்று வைரவாகும் வீடியோக்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கும்.

அந்த வகையில் தற்போது 50 அடி நீள அனகோண்டாவின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மிக நீளமான மற்றும் தடிமனான அனகோண்டா பாம்பு ஒன்று ஒரு நதியை கடந்து செல்வது போன்று உள்ளது. அது பிரேசிலின் சிங்கு நதியில் எடுக்கப்பட்ட வீடியோ என குறிப்பிடப்பட்டிருந்தது.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

அந்த வீடியோவில் இருந்த அனகோண்டா பாம்பைப் பார்த்தவர்களின் மனக்கண்ணில் அனகோண்டா படமும், அதில் ஆளைச் சுற்றி அப்படியே விழுங்கும் அனகோண்டா பாம்பும் தான் வந்து போனது. இதனாலேயே அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போனார்கள். இதனாலேயே அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டது.

எடிட் செய்யப்பட்ட வீடியோ

எடிட் செய்யப்பட்ட வீடியோ

ஆனால் தற்போது அந்த வீடியோ உண்மையானது அல்ல என்ற உண்மை தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யூடியூபில் வெளியான வீடியோவாம் அது. பொழுதுபோகாத யாரோ சிலர், அதனை மீண்டும் எடிட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இருந்த பாம்பின் நீளத்தைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்ததால், அது வைரலாகி விட்டது.

எல்லாமே டுபாக்கூர்

எல்லாமே டுபாக்கூர்

உண்மையில், ஒரு பெரிய அனகோண்டா சாலையில் தேங்கியிருக்கும் நீரை கடந்து செல்லும் வீடியோ தான் அது. அந்த பெரிய சைஸ் அனகோண்டா இன்னும் பெரிதாக தோற்றமளிப்பது போன்று எடிட் செய்து தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாத நெட்டிசன்கள் பலர் வீடியோவில் உள்ள அனகோண்டா உண்மையிலேயே 50 அடி நீளம் கொண்டது தான் என நம்பி மெய்சிலிர்த்துவிட்டனர்.

விழிப்புணர்வு தேவை

விழிப்புணர்வு தேவை

முன்பு வேகமாகப் பகிரப்பட்டதால் அந்த பொய்யான வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்றது. தற்போது அந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரிய வந்து விட்டது. இதனால் தான் சமூகவலைதளப் பக்கங்களில் பார்ப்பதை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு மற்றவர்களுக்குப் பகிரக்கூடாது என்பது. பாவம் உண்மை தெரியாமல் எத்தனை பேர் கனவில் அனகோண்டா வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

English summary
A video of a 50 foot Anancond crossing Xingu river in Brazil has gone viral on social media. The fact check reveals that is a fake one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X