For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது மங்கோலியாவில் பூமி அப்டியே இடம்பெயர்ந்து 'ஆறு போல' ஓடியதா? வைரல் வீடியோக்களால் 'பரபர'

மங்கோலியாவில் பூமி இடம்பெயர்ந்ததாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் 'பூமி' அப்படியே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து 'ஆறு போல் ஓடுகிறது' என ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இவை நிலச்சரிவின் ஒருவகை என்றும் பழைய வீடியோக்களே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மங்கோலியாவில் பூமி இடம்பெயரும் அதிசயம் எனக் குறிப்பிட்டு 2 வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ காட்சிகள் உண்மைதான் என்றாலும் பூமி இடம்பெயரவும் இல்லை; மங்கோலியாவில் இது நிகழவும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 A Truth Behind Viral Videos on Mongolia Earth Crust

முதல் வீடியோவில் கருமை நிற மண் அப்படியே ஆறுபோல் இடம்பெயர்ந்து செல்கிறது; 2-வது வீடியோவில் உயரமான குன்று பகுதி மெது மெதுவாக சரிந்து பேராறு நகர்ந்து செல்வது போல் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த இரு வீடியோக்களும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியவைதான். 2 வீடியோக்களுமே நிலச்சரிவின் தன்மையை வெளிப்படுத்தக் கூடியவை என கூறப்படுகிறது.

நிலச்சரிவு வேகமாக அல்லது மெது மெதுவாக நிகழ்கின்ற போது இத்தகைய தோற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 சீனாவிலும் 2010-ல் இத்தாலியிலும் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு வீடியோக்களை வைத்துதான் மங்கோலியாவில் பூமி அப்படியே இடம்பெயர்ந்து போகிறது என பீதி கிளப்பிவிட்டிருக்கின்றனராம் நெட்டிசன்கள்.

English summary
Here the truth behind the viral videos in the name of Mongolia Earth Curst.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X