For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நிலைமை சீரானதால் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

வடக்கு ஜப்பானில் மாமகட்டாவுக்கு அப்பால் உள்ள நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டது. ஹென்சு தீவில் இருந்து 85 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

Tsunami alert lifted in Japan after Earthquake

இதைத் தொடர்ந்து ஜப்பானில் கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்கு ஜப்பானில் உள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், பேரலைகள் தாக்கக் கூடும் என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

அதே நேரம், நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளில் உள்ள அணுமின்நிலையங்களுக்கு ஆபத்து இல்லை என்று ஜப்பான் அரசு கூறியது. இந்த நிலையில் நிலைமை சீரானதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Japan's meteorological agency has lifted an earlier tsunami warning, after a 6.8 magnitude earthquake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X