For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! மக்கள் வெளியேற்றம்!

கியூபாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ

    பியூர்டோ ரிகா: கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கியூபா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகன் இந்தியாவை விட 10.30 நேரம் பின்னுக்கு உள்ளது. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு கரிபீயன் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜமைக்கா மேற்குபகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.

    வீதிகளில் தஞ்சம்

    வீதிகளில் தஞ்சம்

    கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    சுனாமி எச்சரிக்கை

    சுனாமி எச்சரிக்கை

    கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க, பிரிட்டிஷ் தீவுகள்

    அமெரிக்க, பிரிட்டிஷ் தீவுகள்

    ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா, பெலிஸ், கோஸ்டா ரிகா, கேமேன் தீவுகள், பனாமா, கவுதமாலா, பியூர்டோ ரிகா, மற்றும் கரீபியன் கடற்பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் வெளியேற உத்தரவு

    மக்கள் வெளியேற உத்தரவு

    நிலநடுக்கத்தால் குறைந்தது ஒரு மீட்டர் உயரத்துக்காவது கடல் அலைகள் எழும்பும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியே உத்தரிவிடப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்பகுதியில்..

    கிழக்கு கடற்பகுதியில்..

    அமெரிக்க வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்கு கடற்பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Powerfull earth quack in caribbean sea. Tsunami warning issued includes coasts of Jamaica, Mexico, Honduras, Cuba, Belize, Costa Rica and more. The USGS said that hazardous tsunami waves were possible for coasts located within 1,000 kilometers of the earthquake epicenter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X