For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பரபரப்பு.. அணுக்கழிவுகள் சேமித்து வைத்த சுரங்க சுவர் இடிந்ததால் கதிர் வீச்சு அச்சம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள அணு உலையில், அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால் அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரிய

By Devarajan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரின் தென்கிழக்கே 275 கிலோமீட்டர் தொலைவில் ஹான்போர்ட் அணு உற்பத்தி தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து நடந்துள்ளது.

இந்த அணு உலை இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டுகளை தயாரிக்க தேவையான புளூட்டோனியம் என்ற மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையாக இருந்தது.பின்னர் கடந்த இந்த தொழிற்சாலை கடந்த 1987-ம் ஆண்டு மூடப்பட்டது.

Tunnel collapse at Han ford Nuclear site USA

இங்கு செறிவூட்டப்பட்ட அணுக்களில் இருந்து வெளியான கழிவுகள், தண்டவாளத்தின் வழியாக சிறு பெட்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, பலகோடி லிட்டர் அளவிலான அணுக்கழிவுகள் அனைத்தும் பூமியின் அடியில் உள்ள பாதுகாப்பான இரும்பு தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த அணுக் கழிவுகளை கொண்டு செல்லும் தண்டவாளம் ஒரு சுரங்கப்பாதைக்குள் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நூறடி நீளம் கொண்ட இந்த சுரங்கத்தின் மேல்பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. உடனே அந்தப் பகுதியில் பதற்றம் உண்டானது.

சுமார் 20 அடி நீளத்துக்கு இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இடிந்து விழுந்த சுரங்கத்தின் பாதுகாப்பு கதவுகள் உடனடியாக மூடப்பட்டன.

வெளியேறியவர்கள் அனைவரும் நல்ல காற்றோட்டமுள்ள பகுதியில் ஒன்றாக திரண்டனர். அணுக்கழிவின் கசிவு பாதித்திருக்கலாம் என்ற அச்சத்தில் உடனடியாக தண்ணீர் அருந்தவோ, உணவு உட்கொள்ளவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அருகாமையில் உள்ள பகுதிகளிலும் இந்த விபத்து தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அணுக்கதிர் வீச்சு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Hanford Nuclear Reservation in southeastern Washington after a portion of a tunnel that contains rail cars full of nuclear waste collapsed. An emergency was declared on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X