For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய-பாக். போர் பதற்றம்... பேசி தீர்க்க துருக்கி வலியுறுத்தல்- வீடியோ

    அங்காரா: இந்தியா பாக். போர் பதற்றம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவும், சமரசம் செய்து வைக்க தயார் என்றும் துருக்கி அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொலியாக இன்று காலை இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

    அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் எதிர்கொண்டன. அப்போது இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம் ஒன்றும், அதில் இருந்த விமானியும் காணாமல் போயினர்.

    சென்னை விமானி

    சென்னை விமானி

    சிறிது நேரத்திலேயே... கைது செய்யப்பட்ட இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.அந்த விமானி சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பது தெரிய வந்தது. இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்தியா வெளியிட்டது.

    மீட்க நடவடிக்கை

    மீட்க நடவடிக்கை

    இந்திய விமானியை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. தொடரும் தாக்குதல்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    விமானி அபிநந்தன் பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து.... உலக நாடுகளும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை உற்று நோக்க ஆரம்பித்துள்ளன.

    பிரான்ஸ் எச்சரிக்கை

    பிரான்ஸ் எச்சரிக்கை

    ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளுக்கு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளை செல்ல வேண்டாம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இரு நாடுகளின் நிலவரங்கள் கவலை அளிப்பதாக துருக்கி கூறியுள்ளது.

    கவலை அளிக்கிறது

    கவலை அளிக்கிறது

    இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரதமர் மெவ்லட் காவிஸ்லுகு கூறியதாவது:இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போதைய சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது.

    தீர்வுக்கு தயார்

    தீர்வுக்கு தயார்

    இந்த பிரச்சனையை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட முடியாது. இருநாடுகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கவும் துருக்கி தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    English summary
    Turkey is concerned about the tension between India and Pakistan and we do not want this to escalate. Ankara is ready to play its part to ease the current situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X