For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் நரேந்திரமோடி உருவபடத்துடன் தபால்தலை வெளியிட்டு கவுரவித்த துருக்கி

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: பிரதமர் நரேந்திரமோடியை கவுரவப்படுத்தும் விதமாக துருக்கி நாடு அவரது உருவம் பொறித்த தபால்தலையை வெளியிட்டுள்ளது.

துருக்கியில் சமீபத்தில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி அதில் பங்கேற்றார். விழாவுக்கு வருகை தந்த மோடியை கவுரவிக்கும்வகையில், அந்த நாட்டு தபால் ஸ்டாம்பில் மோடி படம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Turkey issues special stamp featuring PM Modi

2.80 லிரா (துருக்கி பண மதிப்பு) கொண்ட ஸ்டாம்பில் மோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 'நரேந்திரமோடி-இந்திய குடியரசின் பிரதமர்' என்றும் ஸ்டாம்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன பிரதமர் ஜி ஜிங்பிங், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், கனடா பிரதமர் ஜஸ்டின், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கல், ஜப்பான் பிரதமர் சின்சோ அபி மற்றும் ஐரோப்பிய கவுன்சிலர் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் படங்களுடனும் தபால் தலை வெளியிட்டுள்ளது துருக்கி.

English summary
A personalised postage stamp featuring Prime Minister Narendra was issued by Turkey in remembrance of the just concluded G20 Leaders Summit here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X