For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களை வாழ வைத்த தெய்வம் ஒபாமா... அமெரிக்க புற்றுநோயாளிகள் உருக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா தனது நிறைவுரையை ஆற்றி விட்டார். உருக்கமான அவரது உரையில் நெகிழ்ச்சியும், சந்தோஷமும், சோகமும், கண்ணீரும் கலந்திருந்ததைப் பார்த்து அமெரிக்க மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

வழக்கம் போல இதையும் விமர்சிப்போரும் உண்டு. அதேசமயம், ஒபாமாவுக்கு நன்றி கூறியும், அவரது நல்ல விஷயங்களைப் பாராட்டியும் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அமெரிக்கர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

டிவிட்டரில் ஒபாமா தொடர்பான சில டிவீட்டுகள் கண்ணில் சிக்கின. அதிலிருந்து சில..

இனிமேல் இப்பேச்சைக் கேட்க முடியாது

ஸ்டீபன் கிங் என்பவர் போட்டுள்ள ட்வீட்டில், ஒபாமாவின் பேச்சை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இதுமாதிரியான கருணை கலந்த பேச்சை இனி நாம் நீண்ட காலத்திற்குக் கேட்க முடியாது. நன்றி ஒபாமா என்று கூறியுள்ளார்.

உணர்ச்சிகரமாக உள்ளேன்

அல்லுரிங் ஐவி என்பவரின் டிவீட் இது. நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே ஒபாமாவை அதிபராகப் பார்த்து வுருகிறேன். நான் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். அவர் இப்போது போவதையும் நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

நம்பவே முடியவில்லை

பாயில்ட் ஸ்குர்ரல் என்பர் போட்டுள்ள டிவீட்: ஒபாமா விடை பெறுகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது தந்தை எனக்கு செய்தது போல பல விஷயங்களை அவரிடமிருந்து நான் பெற்றுள்ளேன். நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஒபாமா மகளைப் போல இருங்கள்

டூயன் பிராட் போட்டுள்ள சுவாரஸ்யமான டிவீட் இது: சாஷா ஒபாமா (மகள்) தனது தந்தையின் நிறைவுரைப் பேச்சைக் கேட்க வரவில்லை. காரணம் அவருக்குப் பரீட்சை. லீவு கேட்கும் மாணவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

வாழ வைத்த தெய்வம்

ஸெனி என்பவர் போட்டுள்ள நெகிழ்ச்சிகரமான ட்வீட் இது: நான் இன்று உயிருடன் இருக்கவும், இந்த டிவீட்டைப் போடவும் முக்கியக் காரணம் எனது அதிபர்தான். புற்றுநோயுடன் போராடும் பெண்களுக்கான மருத்துவத் திட்டத்தை கொண்டு வந்தவர் அவர். நன்றி ஒபாமா என்று நெகிழ்ந்துள்ளார்.

முழுமை இல்லைதான், ஆனால் நல்லவர்

ராக்ஸான் கே என்பவரின் டிவீட் இது: அதிபர் ஒபாமாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் முழுமையானவர் இல்லை என்றாலும் கூட, நல்ல அதிபராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

ஊக்க சக்தி

இல்ஹான் ஓமர் என்பவரின் பதிவு: ஊக்க சக்தியாக, நம்பிக்கையாக, நல்ல மாற்றமாக விளங்கியவர் ஒபாமா. அதற்காக நன்றி. எனது அதிபர் என்று அவரைக் கூறுவதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Twitterati have hailed and praised President Obama after his emotional farewell speech in Office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X