For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைனில் விமானத்தை வாங்கிய சீன நிறுவனம்... கஸ்டமர் இடத்திற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டது!

சீன நிறுவனம் ஒன்று போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்லைனில் விமானத்தை வாங்கிய சீன நிறுவனம்...கஸ்டமர் இடத்திற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டது- வீடியோ

    பெய்ஜிங்: சீன நிறுவனம் ஒன்று போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறது. பல நாட்கள் விற்காமல் இருந்த இந்த விமானம் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் அந்த விமானத்தை புக் செய்த நிறுவனத்தின் இடத்திற்கே சென்று நேரடியாக ஷாப்பிங் நிறுவனம் டெலிவரி செய்து இருக்கிறது. இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மீண்டும் அதே நிறுவனம் இன்னொரு விமானத்தையும் வாங்கி இருக்கிறது.

    ஆன்லைன் மூலம் உலகிலேயே இரண்டு விமானங்கள் வாங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சீனா ஆன்லைன் வர்த்தகத்தில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.

    பழைய விமானம்

    பழைய விமானம்

    சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 747எஸ் ராக விமானம் இரண்டு பல நாட்களாக பயன்படுத்தபடாமல் இருந்து வந்து இருக்கிறது. கடந்த ஆறு வருடமாக இந்த விமானத்தை பல இடங்களில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் முயற்சி செய்து இருக்கிறது. இதையடுத்து தென் சீனாவில் உள்ள நீதிமன்றம் இந்த விமானத்தை ஆன்லைனில் விற்கும்படி உத்தரவிட்டது.

    ஆன்லைன் விளம்பரம்

    ஆன்லைன் விளம்பரம்

    இதையடுத்து இந்த இரண்டு விமானத்தையும் அலிபாபா குழுமத்தின் 'டோபாவ்' என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாங்கியது. இந்த இரண்டு விமானங்களையும் புதுப்பித்து புதிதாக பெயிண்ட் அடித்து விற்பனை செய்ய முடிவு செய்தது. மேலும் இதற்காக அவர்களது இணையதளம் முழுக்க நிறைய விளம்பரங்களை கொடுத்து இருந்தது. நிறைய ஆபர்களும் இந்த விமான விற்பனைக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

    விமானம் ஆன்லைனில் விற்கப்பட்டது

    விமானம் ஆன்லைனில் விற்கப்பட்டது

    இப்படி ஒரு விமானம் விற்பனைக்கு வருவதை 'எஸ்.எஃப் ஏர் கார்கோ' என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் கேள்வி பட்டு இருக்கிறது. முதலில் ஒரு விமானத்தை மட்டும் ஆன்லைனில் புக் செய்து இருக்கிறது. அதன்பின் இரண்டாவது விமானத்தையும் ஆன்லைனிலேயே புக் செய்துள்ளது. இரண்டு விமானங்களுக்கும் ஆன்லைன் மூலம் 48 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் செலுத்தி இருக்கிறது அந்த நிறுவனம். இதையடுத்து 6 வருடமாக விற்காமல் இருந்த அந்த விமானம் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    சொன்ன இடத்தில் டெலிவரி

    சொன்ன இடத்தில் டெலிவரி

    இந்த நிலையில் அந்த விமானத்தை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கியது. எஸ்.எஃப் ஏர் கார்கோ நிறுவனம் தனக்கு சொந்தமான இடத்தில் வந்து விமானத்தை டெலிவரி செய்யும்படி கூறியது. அவர்கள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு மறுநாளே விமானத்தை டெலிவரி செய்து இருக்கிறது அலிபாபா நிறுவனம். உலகிலேயே ஆன்லைனில் விமானம் விற்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

    English summary
    Two 747 jets bought through online shopping in china. Chinese online shopping portal Taobao delivered the aero plane to customer place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X