For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2018 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 2 அமெரிக்கர்கள் தட்டிச் சென்றனர்!

2018ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வழங்கும் விழா தற்போது திருவிழா போல நடந்து வருகிறது. வரிசையாக ஒவ்வொரு துறைக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

Two American Economists got the Nobel Price 2018 for Economic

2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு ஒரு வாரமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.

இதுவரை வேதியியல், இயற்பியல், அமைதிக்கான நோபல் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 2018ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நோபல் பரிசை வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் இணைந்து பெறுகின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காகவும், பருவ நிலை மாற்றம் சார்ந்த பொருளாதார ஆய்வுக்காகவும் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

பொருளாதார துறையில் இதுதான் மிக உயரிய விருது ஆகும். இந்த வருடமும் உலகின் முன்னணி பெண் பொருளாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக இதனால் புகார் எழுந்துள்ளது. இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயை பாதியாக புரிந்து கொள்வார்கள்.

English summary
Two American Economists got the Nobel Price 2018 for Economic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X