For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்- விண்ணிலிருந்து 2 ஓட்டு பாஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இரண்டு விஞ்ஞானிகள் வாக்களித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் விஞ்ஞானிகள் இருவர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வாக்களித்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக அதிபர் வேட்பாளர்கள் மட்டுமின்றி ஒபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Two Astronauts votes for US president Election from space:says NASA

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை அறிய 120 மில்லியன் அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் பூமிக்கு வராமலே விண்வெளியில் இருந்து வாக்களித்துள்ளதாக நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஷானெ கிம்ப்ரோக் என்ற விஞ்ஞானி கடந்த வாரம் தனது விண்வெளியில் இருந்தபடியே தனது வாக்கை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள நாசா, மற்றொரு விஞ்ஞானியான கேட் ரூபின்ஸ் கடந்த வாரம் பூமிக்கு திரும்புவதற்கு முன் தனது ஓட்டை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது. 1997ஆம் ஆண்டு டெக்ஸ்சாஸ் மாகாண அவையில் விண்வெளியில் இருந்து விஞ்ஞானிகள் ஓட்டுப்போடுவதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே விண்வெளியில் இருந்து வாக்களிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. விண்வெளியில் இருந்து வாக்களித்த முதல் அமெரிக்க விஞ்ஞானி டேவிட் வோல்ஃப் ஆவார். அவர் ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two American Astronauts votes for US presidential Election on last week from international space station:said NASA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X