For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ போன் எஸ் 6 வாங்க "கிட்னி"யை விற்க முயன்ற இளைஞர்கள்... சீனாவில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஐ போன் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் தேவைக்காகத் தான் அனைத்துப் பொருட்களும். ஆனால், புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே மனிதர்கள் உழைக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிலும், சில தொழில்நுட்ப சாதனங்கள் வைத்திருப்பது கவுரவப் பிரச்சினையாகவும் மாறி வருகிறது.

Two Chinese men try to sell kidney for latest iPhone

அந்த வகையில் சீனாவில் ஹுவாங் மற்றும் வு என்ற இரண்டு இளைஞர்களுக்கு ஐ போன் 6எஸ் வாங்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அதற்கு அவர்களிடம் பணம் இல்லை. எப்படி அதற்குரிய பணத்தை சம்பாரிப்பது என யோசித்த இளைஞர்கள், தங்கள் கிட்னியை விற்க முடிவு செய்தனர்.

இதற்காக இணையம் மூலம் ஒரு தரகரை அவர்கள் அணுகியுள்ளனர். அவர், இவர்களை மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வரச்சொல்லியுள்ளார். அதன் படி இருவரும் சென்றுள்ளனர். ஆனால் தரகர் வரவில்லை.

இதற்கிடையே, வுவுக்கு இந்த திட்டத்தில் திடீர் மனமாற்றம் ஏற்பட்டது. இந்த திட்டத்தை கைவிட்டு விடலாம் என அவர் ஹூவாங்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. இதனால் தங்கள் திட்டம் பற்றி வு போலீசிற்கு தகவல் அளித்தார்.

போலீசிற்கு தகவல் தெரிந்த விஷயம் அறிந்த ஹூவாங் தலைமறைவானார். தற்போது ஹுவாங்கை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது.

English summary
In a bizarre incident, two men in China's eastern Jiangsu Province apparently tried to sell their kidney for Apple's latest offering, the iPhone 6s.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X