For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ஆராய்ச்சியாளர்களின் தொழில்நுட்பத்தை திருடிய 'ஆப்பிள்'... ரூ.1400 கோடி அபராதம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய ஆராய்ச்சியாளர்கள் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் குரிந்தர் சோஹி. இவரும் இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமாரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தில் பி.டெக்., பட்டம் பெற்றவர்கள்.

Two Indian-American engineers sued Apple for stealing tech

குரிந்தர், விஜயகுமார் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவினர் விஸ்கான்சின் பல்கலையின் கீழ் செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்புக்கு சாப்ட்வேர் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கினர். அதிவேகமாக செயல்படக்கூடிய அந்த சாப்ட்வேரின் காப்புரிமையும் அவர்கள் வசமே இருந்தது.

இந்நிலையில், அந்த சாப்ட்வேரை ஆப்பிள் நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியது. இது தொடர்பாக மேடிசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியன் கோன்லி, விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பிற்கு 234 மில்லியன் அமெரிக்க டாலரை அபராதமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்திய மதிப்பில் இது ரூ. 1400 கோடி ஆகும்.

இந்தத் தீர்ப்பு குறித்து விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கார்ல் குல்பிரான்ட்சென், ‘இந்த தீர்ப்பு, எங்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Tech giant Apple has been told to pay $234 million to the intellectual property arm of Wisconsin University, Madison, for using without permission patented technology developed by its team, including two Indian-American engineers. The case centres on technology that became a component of processors that run widely popular Apple devices such as the iPhone and iPad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X