For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாசா விஞ்ஞானிகளை தொல்லை செய்த டைரக்டர்.. விண்வெளியில் எடுக்கப்பட்ட அசத்தல் டிவி சீரியல்!

தொலைக்காட்சி சீரியல் ஒன்று மொத்தமாக வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்படும் தொலைக்காட்சி சீரியல்- வீடியோ

    நியூயார்க்: தொலைக்காட்சி சீரியல் ஒன்று மொத்தமாக வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    நாசா விஞ்ஞானிகளின் உதவியுடன், ''ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்'' என்ற சீரியல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நாசா விஞ்ஞானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த சீரியல் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மொத்தம் இந்த சீரியலில் சில மணி நேரம் மட்டுமே, இந்த விண்வெளி காட்சிகள் வருகிறது, ஆனால் அதற்காக நாசா விஞ்ஞானிகள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு பெரிய அளவில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

    சீரியல்

    சீரியல்

    உலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான டேரன் ஆரோன்ஸ்கி அவருடைய ''ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்'' என்ற ஆங்கில சீரியலுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். பூமியில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்பதை நிரூபணம் செய்வதற்காக, அவர் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை, படம் பிடித்து காட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக செட் போடாமல் உண்மையாக படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    கடைசியாக கற்றுக்கொடுத்தார்கள்

    கடைசியாக கற்றுக்கொடுத்தார்கள்

    முதலில் அவர் சொந்தமாக வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால், இரண்டு முக்கியமான நாசா விஞ்ஞானிகள், அவருக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள். பாவ்லோ நெஸ்போலி, பேகி விட்சன் ஆகிய விஞ்ஞானிகள் இதற்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பூமியில் இருந்து வீடியோ கால் மூலம் 12 மணி நேரம் கேமரா எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது.

    பிரச்சனை ஆனது

    பிரச்சனை ஆனது

    அதேபோல் எங்கு லைட் வைக்க வேண்டும், வானத்தில் எந்த கோணத்தில் எடுத்தால் சரியாக இருக்கும், எப்படி வசனம் பேச வைக்க வேண்டும் என்று படம் எடுப்பதற்கான எல்லா விஷயமும் வீடியோ கால் மூலம் சொல்லித்தரப்பட்டுள்ளது. அதன்பின் இங்கிருந்து, உணவு மற்றும் எந்திர உபகரணங்கள் அனுப்பும் ராக்கெட்டில் கேமராவும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கேமரா அங்கு சென்ற பின் வேலை செய்யாமல் பிரச்சனை ஆகியுள்ளது. பின் மீண்டும் கேமராவை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோ கால் மூலம் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

    முக்கியமான சில நிமிடம்

    முக்கியமான சில நிமிடம்

    மொத்தமாக அரை மணி நேரம் வரக்கூடிய அந்த சீனுக்காக, அவர்கள் மொத்தம் 10 நாட்கள் படம் பிடித்து இருக்கிறார்கள். வானத்தில் எப்படி பல் துலக்குவார்கள் என்பது தொடங்கி எப்படி தூங்குவார்கள், என்ன சாப்பிடுவார்கள், என்ன மாதிரியான ஆராய்ச்சி செய்வார்கள், மனிதர்களிடத்தில் இருந்து எப்படி தனித்து இருப்பார்கள் என்று எல்லா விஷயமும் இந்த அரைமணி நேரம் வீடியோவில் வந்துவிடும்.

    English summary
    Two NASA astronauts became directors to shoot a serial in the space station. They have shoot a serial called One Strange Rock driected by Darren Aronofsky.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X