For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாயுடன் ஐந்து மாதம் நடுகடலில் தனியாக தத்தளித்த பெண்கள்... நிஜத்தில் ஒரு 'லைஃப் ஆப் பை'

பசுபிக் கடலில் கடந்து ஐந்து மாதங்களாக தனியாக மாட்டிக் கொண்டு தவித்த பெண்மகளை அமெரிக்க கப்பற்படை தற்போது மீட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தைவான்: அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதியில் திசை தெரியாமல் கடந்து ஐந்து மாதங்களாக கடலிலேயே மாட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்கள். ஐந்து மாதம் முன்பு தனி போட்டில் சுற்றுலா சென்ற பொது இவர்கள் கப்பல் வழி மாறியிருக்கிறது.

இந்த நிலையில் ஐந்து மாதங்களாக நடுக்கடலில் தனியாக கஷ்டப்பட்டு இருக்கின்றனர். மிகவும் ஆபத்தான கடலில் கடந்த மே மாதத்தில் இருந்த இருக்கும் இவர்கள் தற்போது அமெரிக்க கப்பற்படையால் மீட்கப்பட்டு இருக்கின்றனர்.

இவர்கள் செல்லமாக வளர்த்த நாயும் இவர்களுடன் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 கடலில் காணாமல் போன பெண்கள்

கடலில் காணாமல் போன பெண்கள்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் மற்றும் டாஷா என்ற இரண்டு பெண்மணிகள் கடந்த மே மாத தொடக்கத்தில் விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து பசுபிக் கடலில் இருக்கும் 'தஹிதி' என்ற தீவுக்கு செல்ல முடிவு எடுத்து இருக்கின்றனர். இதை மிகவும் வித்தியாசமாக செய்ய முடிவு செய்த இவர்கள் சொந்தமாக சிறிய ரக கப்பல் ஒன்று வாங்கி அதில் சென்று இருக்கின்றனர். ஆனால் இந்த கப்பல் தஹிதி தீவுக்கு செல்லும் வழியில் பாதியில் வேலை செய்யாமல் நின்று இருக்கின்றது. இதன்காரணமாக அவர்கள் எப்படி திரும்பி செல்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

 ஐந்து மாதம் கடலில் பயணம்

ஐந்து மாதம் கடலில் பயணம்

இந்த நிலையில் அவர்கள் கைகளால் துடுப்பு போட்டு அப்படியே கரைக்கு சென்று விடலாம் என முடிவு செய்து துடுப்பு போட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற கப்பலின் திசை மாறி அதற்கு எதிர் திசையில் இருக்கும் தைவான் கடல் பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக நடுக்கடலில் கடந்த ஐந்து மாதங்களாக தத்தளித்து இருக்கின்றனர். இவர்களுடன் இவர்கள் அழைத்து சென்ற நாய் ஒன்றும் மாட்டிக் கொண்டு இருக்கின்றது.

 மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்கள்

மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்கள்

கடலில் உணவு, குடிநீர் இல்லாமல் இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் தைவான் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் தைவான் கடல்துறைக்கு தகவல் அளித்து அதன்முலமாக அமெரிக்க கப்பலை படைக்கும் தகவல் சென்று இருக்கிறது. இவர்கள் நேற்று வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டனர்.

 உண்மையாக நடந்த லைஃப் ஆப் பை

உண்மையாக நடந்த லைஃப் ஆப் பை

இந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்க கப்பல் படைக்கும், தைவான் மீனவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இவர்களுக்கு நடந்த இந்த இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்கர் வாங்கிய 'லைஃப் ஆப் பை' படத்தின் கதை போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் கடலில் மாட்டிக் கொண்டதாக கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A sailing trip from Hawaii to Tahiti turned into worst for two women when their boat engine stopped working almost 6 month into their journey. Now this two Women rescued after five months stranded at Pacific Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X