For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்!

சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

குவாங்டாங்: சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

சீன கடற்பகுதியில் உருவான கனூன் புயல் நேற்று அதிகாலை குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

கனூன் புயலால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் உடடினயாக கரை திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

கால நிலையை வரையறுக்கும் நிறங்கள்

கால நிலையை வரையறுக்கும் நிறங்கள்

சீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மற்றும் நீளம் ஆகிய வண்ணங்களை கொண்டு காலநிலைகளை வரையறுக்கப்படுவது வழக்கம். மிகவும் மோசமான நிலையை சிவப்பு நிறம் குறிக்கும்.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை

ஆரஞ்சு நிற எச்சரிக்கை

இரண்டாவது மோசமான நிலையை ஆரஞ்சு நிறம் குறிக்கும். இந்நிலையில் மோசமான நிலையை குறிக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சீன வானிலை மையம் கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்தது.

புயலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

புயலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இந்நிலையில் நேற்று புயல் கரையை கடந்துள்ளது. இதனால் பலத்த காற்று வீசியதால் ஹாங்காங்கில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

ஹாங்காங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகிலிருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தைவான் மற்றும் சீனாவிற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேல்நோக்கி பாய்ந்த அருவி

மேல்நோக்கி பாய்ந்த அருவி

இந்நிலையில் தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக அருவி ஒன்று உருவானது. ஆனால் அந்த அருவி வழக்கம்போல் கீழ்நோக்கி கொட்டாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாய்ந்தது.

மேலே செல்வது முதல் முறையல்ல

மேலே செல்வது முதல் முறையல்ல

இந்த போட்டோ வெளியாகியுள்ளது. இருப்பினும் புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து அருவிகள் மேல் நோக்கி பாய்வது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு இதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

English summary
Tropical storm Typhoon Khanun made landfall in China's Guangdong province early this morning bringing with it heavy rainfall and high-speed winds. In an astonishing video that emerged over the weekend from the island of Taiwan, winds emerging from the typhoon caused a small waterfall to defy gravity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X