For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்.. 2வது மாடிக்கு வந்த வெள்ளம்.. 19 பேர் சாவு

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானை ஹகிபிஸ் புயலில் நேற்று மாலை பயங்கரமாக தாக்கிய நிலையில், இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால், ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புபணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த புயலில் இதுவரை 100க்கணக்கானோர் காயமடைந்து இருப்பதாக ஜப்பான் போலீசார் தெரிவித்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் வசிப்பதாகவும் தெரிவித்தனர்.

டோக்கியோவை தாக்கியது

டோக்கியோவை தாக்கியது

ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஹகிபிஸ் புயல் சனிக்கிழமை தாக்கியது. டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள ஈஸு என்ற இடத்தில் ஹகிபிஸ் புயல் கரையை கடந்தது.

14 ஆறுகளில் வெள்ளம்

14 ஆறுகளில் வெள்ளம்

இந்த புயல் காரணமாக ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. ஜப்பாளில் உள்ள 14க்கும் மேற்பட்ட நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் 2-வது தளம் வரை முக்கிய நகரங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

 மூழ்கிய வீடுகள்

மூழ்கிய வீடுகள்

இதனால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் ஜப்பான் ராணுவம் ஹெலிகாபட்ரில் மேற்கொண்டு வருகிறது. ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள், பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளது.

100 பேர் காயம்

100 பேர் காயம்

மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரைபுயலில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். 100க்கணக்கனோர் காயடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள ஏராளமான மக்ளை படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு இருந்தனர். இதன் மூலம் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் கோரத்தால் ஜப்பானின் பல்வேறு முக்கிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

English summary
typhoon hagibis makes landfall in japan, at least 19 dead, Japan launches major rescue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X