For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கடலில் கருப்புப் பெட்டி சிக்னலை கண்டுபிடித்த அமெரிக்கா

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடி வரும் நிலையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அதிநவீன கருவி கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது.

இந்திய பெருங்கடலில் 239 பேருடன் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஹைசுன் 01 கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடித்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று வேறு ஒரு பகுதியில் ஒலியை கண்டறிந்தது.

U.S. Navy equipment picks up signals consistent with pings from a black box

இந்நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிய அமெரிக்க கடற்படை அதிநவீன கருவியை பயன்படுத்தி வருகிறது. அந்த கருவி கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை இன்று கண்டறிந்துள்ளது.

இந்த 3 ஒலிகளும் மாயமான விமானத்தினுடையது தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் விமானம் ஒன்று கடலுக்கு அடியில் கிடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஒலிகள் வந்த பகுதியில் விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

English summary
After Chinese and Australian ships detected pings in the Indian Ocean, US navy's ping locator also detected pings, said official on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X