For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருடம் தங்கப் போகும் விண்வெளி வீரர்கள்

Google Oneindia Tamil News

பாரீஸ்: பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓராண்டு காலம் தங்கி ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் அங்கு சென்றடைந்துள்ளனர்.

விண்வெளி மற்றும் அதிலுள்ள கோள்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்வெளியில் ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தங்கி இருந்து விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சாதாரணமாக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு விண்வெளி வீரர் என்ற நிலையில் தங்கி இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இதுவரை இல்லாதபடிக்கு 3 விண்வெளி வீரர்கள் தொடர்ந்து 12 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

சோயுஸ் விண்கலம்...

சோயுஸ் விண்கலம்...

இவர்கள் மூவரையும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் விண்வெளி மையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. இவர்களில் மிகாய்ல் கொர்னியன்கோ மற்றும் கென்னடி இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், ஸ்காட் கெல்லி அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

12 மாத ஆய்வு...

12 மாத ஆய்வு...

ஸ்காட் கெல்லியும், மிகாய்ல் கொர்னியன்கோவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 12 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்வார்கள். ஆனால், கென்னடி 6 மாதங்களில் பூமிக்குத் திரும்பிவிடுவார்.

இரட்டையர்கள்...

இரட்டையர்கள்...

புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிக காலம் தங்கவைக்கப்படுகின்றனர். விண்ணில் எடையுணராமையால் கெல்லிக்கு ஏற்படும் மாற்றங்கள், கெல்லியுடன் இரட்டையராகப் பிறந்தவருக்கு இங்கே பூமியில் உடலில் ஏற்படும் மாற்றங்களோடு ஒப்பிடப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப் படுகிறது.

செவ்வாயில் மனிதர்கள் ஆய்வு...

செவ்வாயில் மனிதர்கள் ஆய்வு...

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான தகவல் சேகரிப்புக்காக இந்த சோதனையை நாசா நடத்துக்கிறது.

ரஷ்ய வீரர் வலெரி...

ரஷ்ய வீரர் வலெரி...

விண்வெளியில் தொடர்ச்சியாக அதிக காலம் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் வலெரி பொலியகொவ் என்ற ரஷ்ய விண்வெளி வீரர் ஆவார். ரஷ்யாவின் 'மிர்' விண்வெளி நிலையத்தில் இவர் ஒரு முறை தொடர்ந்து 14 மாதங்கள் தங்கியிருந்தார்.

கஸகஸ்தானிலிருந்து

கஸகஸ்தானிலிருந்து

கஸகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

3 பேருக்கும் 50 வயதைத் தாண்டியவர்கள்

3 பேருக்கும் 50 வயதைத் தாண்டியவர்கள்

விண்வெளிக்குச் சென்றுள்ள 3 பேருமே 50 வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக வயதானவர் கென்னடிதான். அவருக்கு 56 வயதாகிறது. மற்றவர்களில் கொர்னியென்கோவுக்கு 5 வயதாகிறது. கெல்லிக்கு 51 வயதாகிறது.

English summary
A Russian Soyuz rocket blasted off from the Baikonur Cosmodrome in Kazakhstan on Friday, sending a U.S.-Russia crew to the International Space Station for a year-long flight, a NASA Television broadcast showed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X