For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டினருக்கு வாவ் வாய்ப்பு.. விசா விதிமுறைகளை தளர்த்த அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு

Google Oneindia Tamil News

துபாய்: வெளிநாட்டினர் பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட நீண்டகால குடியிருப்பு விசா வாங்கிக்கொள்ள ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளன.

2019ஆம் ஆண்டு முதல் புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.

UAE to offer expats long-term residency visa after retirement

இதன்படி, 55 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வு பெறும்போது, மேலும் ஐந்தாண்டுகள் வளைகுடா நாடுகளில் வசிக்க முடியும். இந்த விசாவை, மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு விசாவை புதுப்பித்துக்கொள்ள, அங்குள்ள சொத்தில் குறைந்தது 2 மில்லியன் திர்ஹம் அதாவது 544,500 அமெரிக்க டாலர் மதிப்பு அளவுக்கு முதலீடு செய்திருந்தால், அல்லது, 1 மில்லியன் திர்ஹமுக்கு குறையாமல் சேமிப்பு வைத்திருந்தால், அல்லது, வேறு வகையில் மாதம் 20,000 திர்ஹம் அளவுக்கு குறையாமல் வருமானம் வர வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அது முக்கியமான மைல் கல்லாக இருக்கும். ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் ஆறு நாடுகளின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அங்குள்ள ஊழியர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகு அங்கே தங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை.

அதேபோல ஐக்கிய அரபு அமீரக நாடுகள் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளன. மிகப் பெரிய தொழிற்சாலைகளுக்கு 29 சதவீதம் அளவிற்கு கட்டண குறைப்பை செய்யவுள்ளன சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் மின் கட்டணத்தை முறையே 10 மற்றும் 22 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த மாதத்தின் துவக்கத்தில் கத்தார் நாடு குறிப்பிடத்தக்க வெளிநாட்டினருக்கு நிலையாக குடியுரிமை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது

English summary
The United Arab Emirates will allow foreigners to obtain long-term residency visas after they retire, in a major policy shift as the government of the seven-state federation looks to bolster economic growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X