For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் உலகின் நம்பர் ஒன் நாடு ஐக்கிய அரபு அமீரகம்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: பெண்களுக்கு மரியாதை அளிப்பதில் உலக நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

பெண்களுக்கு மரியாதை அளிப்பது குறித்து முக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 132 நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன்கள் பற்றி ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

UAE ranks first in world for treating women with respect

உலகில் பெண்களை மரியாதையாக நடத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த முடிவு அமீரக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அமீரக பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அமீரகத்தில் பெண்கள் உரிமைகள் பற்றி பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடுகையில் அமீரகத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவு வந்துள்ளது. இந்த பண்பை நமக்கு இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது. பெண்கள் தாய்மார்கள், சகோதரிகள், மனைவிமார்கள் மற்றும் மகள்களாக உள்ளனர். பெண்கள் தியாகத்தின் உருவம் என்றார்.

English summary
According to a major scientific study, UAE ranked number one in treating women with respect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X