For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில்... 4000 வருட பழமையான மனித எலும்புக் கூடு சிக்கியது

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ள 4000 வருடம் பழமையான மனித எலும்புக் கூடு ஒன்று சிக்கியுள்ளது. பிரான்ஸ் ஏஜ் டீன் ஏஜ் வயது நபரின் எலும்புக் கூடு இது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஸ்டோன்ஹெஞ்ச் பகுதியில் இந்த எலும்புக் கூடு சிக்கியுள்ளது.

இந்த எலும்புக் கூட ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியவில்லை.

பெவ்சி பள்ளத்தாக்கில்...

பெவ்சி பள்ளத்தாக்கில்...

ரீடிங் தொல்பொருள் ஆய்வாளர்கள் பல்கலைக்கழகத்தை் சேர்ந்த ஆய்வுக் குழு இதைக் கண்டுபிடித்துள்ளது. வில்ட்ஷயரில் உள்ள பெவ்சி பள்ளத்தாக்கு என்ற பகுதியில் இந்த எலும்புக் கூடு கிடைத்தது.

4000 வருட எலும்புக்கூடு...

4000 வருட எலும்புக்கூடு...

இதன் மூலம் 4000 வருடத்திற்கு முந்தைய மக்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கழுத்தில் நெக்லஸ்...

கழுத்தில் நெக்லஸ்...

இந்த எலும்புக் கூடானது 1.5 மீட்டர் நீளம் இருக்கிறது. இரு கால்களும் மேல் நோக்கி மடங்கிய நிலையில் உடல் கிடைத்துள்ளது. கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ளன. தலை வலதுபுறமாக திரும்பியுள்ளது. கழுத்தில் ஒரு நெக்லஸும் இருக்கிறது.

தொல்பொருள் சின்னங்கள்...

தொல்பொருள் சின்னங்கள்...

மார்டன் ஹென்ச் பகுதியில் ஆய்வாளர்கள் தொல் பொருள் ஆய்வுக்காக தோண்டியபோது தான் இந்த எலும்புக் கூடு சிக்கியது. இப்பகுதியில் தொல் பொருள் சின்னங்கள் பெருமளவில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மிகப்பெரிய கண்டுபிடிப்பு...

மிகப்பெரிய கண்டுபிடிப்பு...

இதுகுறித்து ஆய்வுக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜிம் லியரி கூறுகையில், "இது மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். அக்காலத்து வாழ்க்கை முறை குறித்து அறிய முடியும். அவர்களின் இயல்பு, வாழ்க்கை முறை, சாப்பாட்டு வழக்கம் உள்ளிட்டவற்றையும் அறிய முடியும்.

யார் அவர்?

யார் அவர்?

இந்த நபர் எப்படி இருந்தார், அவர் என்ன சாப்பிட்டிருப்பார். என்ன நோய் தாக்கியது என்பதையும் கூட நாம் அறிய முடியும். எப்போது இந்த உடல் புதைக்கப்பட்டது என்பதையும் அறிய முடியும்"என்கிறார் அவர்.

English summary
A well-preserved skeleton of a Bronze Age teenager, dating back to 4,000 years, has been discovered in a foetal position near the prehistoric monument Stonehenge in UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X