For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ். பாணியில் யு.கே: விமானங்களில் இஸ்லாமிய நாடுகளிலிருந்து மின்சாதனப் பொருளை கொண்டுவர தடை

Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து மின்சாதனப் பொருட்களை கொண்டுவர தடை விதித்துள்ளது. லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவற்றை இஸ்லாமிய நாடுகளில் இருந்து விமானங்களில் கொண்டு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லேட் உள்ளிட்டவற்றை கொண்டுவர தடைவிதித்துள்ளது. 8 இஸ்லாமியா நாடுகளின் 10 விமான நிலையங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப் போன்ற மின்சாதனப் பொருட்களின் கண்டுபிடிக்க முடியாத வெடிகுண்டுகளை மறைத்து வைக்கும் தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி இஸ்லாமிய நாடுகளில் இருந்து லேப்டாப் உள்ளிட்டவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.

6 நாடுகளுக்கு தடை

6 நாடுகளுக்கு தடை

இந்நிலையில் இதே அறிவிப்பை பிரிட்டன் அரசும் அறிவித்துள்ளது. பிரிட்டனின் இந்த தடை துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 6 நாடுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக பேக் செய்திருக்க வேண்டும்

முழுமையாக பேக் செய்திருக்க வேண்டும்

பயணிகள் இந்த மின்சாதனப் பொருட்களுடன் பயணிக்கலாம் என தெரிவித்துள்ள அமெரிக்க அரசு அவை முழுமையாக அமெரிக்கா மற்றும் லண்டனில் முழுமையாக செக் செய்யப்பட்டு பேக் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ல் அல்கொய்தாவுக்கு உதவி

2014ல் அல்கொய்தாவுக்கு உதவி

2014ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிப்பாளரான இப்ராஹிம் ஹசன் அல் அஸ்ரி ஏமன் அல் கொய்தா பிரிவுக்கு ஏராளமான வெடிகுண்டு சதிகளை நிகழ்த்தியிருப்பதாகவும், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு கண்டுபிடிக்க முடியாத வெடிகுண்டுகளை கண்டுபிடித்து கொடுத்திருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இதனை அடிப்படையாக கொண்டே இஸ்லாமிய நாடுகளில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு துருக்கி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் அரசும் தடை விதித்திருப்பது இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

English summary
Britain joined the United States on Tuesday in barring passengers traveling from airports in several Muslim-majority countries from bringing laptops, tablets and other portable electronic devices on board with them when they fly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X