For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் தோழியுடன் உல்லாச வாழ்க்கையா வாழ்றீங்க.. மல்லையாவுக்கு பிரிட்டன் ஹைகோர்ட் வைத்த ஆப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மல்லையாவுக்கு எதிராக பிரிட்டன் ஹைகோர்ட் கொடுத்த தீர்ப்பு- வீடியோ

    லண்டன்: பொருளாதார குற்றவாளியான விஜய் மல்லையாவுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் உயர் நீதிமன்றம் நேற்று 13 இந்திய வங்கிகளுக்கு சாதகமாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    இதன்படி அமலாக்க அதிகாரிகள் விஜய் மல்லையாவின் இடங்களுக்குச் சென்று சோதனையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த அனுமதி பொருந்தும்.

    பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட இந்திய வங்கிகளில் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷா் நிறுவனம் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை. இந்திய வங்கிகளில் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா பிரிட்டனுக்கு தப்பித்து ஓடினார்.

    தோழியுடன் உல்லாசம்

    தோழியுடன் உல்லாசம்

    தற்போது லண்டன் அருகே உள்ள தெவின் என்ற பகுதியில் உள்ள வசதியானவர்கள் வசிக்கக் கூடிய ஒரு எஸ்டேட்டில் தனது தோழி பிங்கி லால்வானியுடன் தங்கி உள்ளார். லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டனுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

    வங்கிகள் வழக்கு

    வங்கிகள் வழக்கு

    நாடு கடத்துதல் தொடா்பான வழக்கில் கைது வாரண்டு வெளியிடப்பட்டதையடுத்து, விஜய் மல்லையா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டபோதிலும், அவா் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

    சோதனை நடத்த அனுமதி

    சோதனை நடத்த அனுமதி

    இந்த வழக்கில், விஜய் மல்லையா தங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தவும், மல்லையாவுக்கு சொந்தமான பொருள்களை கையகப்படுத்தவும் பிரிட்டன் உயா் நீதிமன்ற சட்ட அமலாக்க அதிகாரிக்கும், அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

    சோதனை அனுமதியில்லை

    சோதனை அனுமதியில்லை

    ஒருவேளை, அவசியம் ஏற்பட்டால், மல்லையா தங்கியிருக்கும் பகுதிக்குள் செல்வதற்கு போலீஸாரை பயன்படுத்துவதற்கும், பிரிட்டன் உயா் நீதிமன்ற சட்ட அமலாக்கத் துறை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதிலும், இன்னும் சோதனை நடத்த உத்தரவிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Vijay Mallya's home can be searched and his assets can be seized as a means of recovering the money he owes banks in India in unpaid loans, following an enforcement order by a UK judge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X