For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெற்றிகரமாக நடந்து முடிந்த யுகே-இந்தியா வாரம்.. 35 நிறுவனங்களுக்கு சிறப்பு விருது!

வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியா ஐஎன்சியின், யுகே-இந்தியா வாரத்தில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது .

Google Oneindia Tamil News

லண்டன்: வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியா ஐஎன்சியின், யுகே-இந்தியா வாரத்தில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது .

யுகே-இந்தியா வாரம், கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர். யுகே-இந்தியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பணியாற்றும் நபர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டது.

UK-INDIA awards 2019 shortlist announced by judges

தற்போது பிரிட்டனில் மொத்தம் 842 நிறுவனங்கள் இயங்கி வருகிறது . இதன் மூலம் 48 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டப்படுகிறது . 46.4 பில்லியன் யூரோ வருமானம் 2018ல் ஈட்டப்பட்ட நிலையில், 2019ல் அது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து செய்யப்படும் முதலீடுகள் 321% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகிறார்கள் என்பது தெரியாது. பிரிக்சிட் இருந்தாலும் இல்லை என்றாலும் இந்தியா செய்யும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த யுகே-இந்தியா வாரத்தின் விருது வழங்கும் குழுவின் பெண்கள் நடுவர் குழு விவரம். இதில் அரசியல், பொருளாதாரம் , மீடியா என பல்துறை வல்லுநர்கள் இருந்தனர்.

  • ரூத் டேவிட்சன், எம்பி, ஸ்கட்டிஷ் கன்சர்வேட்டிவ் பார்ட்டி
  • ஹரிணி அரோரா, சிஇஓ, சவன்னா விஸ்டம்
  • டிப்போரா டி'ஆபன, இயக்குனர், ரோல்ஸ் ராய்ஸ்
  • ஆர்டி. ஹானர், பேட்ரிகா ஹெவிட் , முன்னாள் யுகே அமைச்சர்
  • ஜின்னா மில்லர், ட்ரு அண்ட் ஃபேர் பவுண்டேஷன்
  • பல்குணி நாயர், நைகா.காம் நிறுவனர்

இதில் மொத்தம் 35 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன:

  • ஜான் லெவிஸ் பவுண்டேஷன் - சமூக முன்னேற்றம் விருது வழங்கப்பட்டது
  • டேக் யுகே நிறுவனம் -நல்ல முதலீட்டு நிறுவன விருது வழங்கப்பட்டது
  • எனர்ஜி ஏபிசியென்சி சர்விஸ் லிமிடேட் - தி டீல் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது
  • பஃபலோ கிரிட் - நல்ல தொழில்முனைவோர் நிறுவனம் விருது வழங்கப்பட்டது
  • பாக்கர் மெக்கென்சி - சிறந்த சட்ட நிறுவனம் விருது வழங்கப்பட்டது
  • தி சாப்ட்பேன்க் விஷன் - சிறந்த முதலீடு விருது வழங்கப்பட்டது
  • பிடபிள்யு நிறுவனம் - கன்சல்டன்சி நிறுவனம் விருது வழங்கப்பட்டது

இந்த வருடம் பிரிட்டிஷ் ஏரியின் டிரஸ்ட் வொர்க்கிங் நிறுவனம் சிறந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா ஐஎன்சியின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து பேசுகையில்,யுகே-இந்தியா வாரம் மக்களாய் ஒருங்கிணைக்கிறது.திறமையான நபர்களை ஒன்றாக சேர்க்கிறது. இதனால் இந்தியா லண்டன் இடையே உறவு மேம்படுகிறது.

இதன் மூலம் இரண்டு நாடுகளில் புதிய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையில் பெரிய ஒப்பந்தங்களை செய்ய உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

English summary
A key highlight of UK-India Week (24 - 28 June 2019), the UK-India Awards brings together and celebrates the innovative and trailblazing individuals and organisations that are making a significant contribution to the strong global partnership between the UK and India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X