For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிறைவடைந்தது யுகே-இந்தியா வாரம்.. ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது

யுகே-இந்தியா வாரம் நிகழ்வின் இறுதியாக, குளோபல் இந்திய ஐகான் விருது, ஷில்பா ஷெட்டிக்கு வழங்கப்பட்டது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: யுகே-இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய ஐகான் விருதை ஷில்பா ஷெட்டி தட்டிச் சென்றார்.

யுகே-இந்தியா வாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த 400 சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர்.

UK-India Week 2018: Global Indian icon award goes to Shilpa Shetty

தொழிலதிபர் சுனில் பார்தி மிட்டல், பிரித்தி பாட்டில் எம்.பி., பர்ரி கார்டினெர் எம்.பி மற்றும் லார்ட் மார்லேன்ட் உள்ளிட்டோர் நீதிபதிகளாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தொகுத்து வழங்கினார்.

பிரிட்டன் இந்திய தொழிலதிபர் மற்றும் அரசியல் வியூகவல்லுநர் மனோஜ் லட்வா பேசுகையில், யுகே-இந்தியா நாடுகள் நடுவேயான கூட்டுக்கு இந்த விழா உறுதுணையாக இருந்துள்ளது என்றார்.

யுகே-இந்தியாவின் 2வது ஆண்டு விழாவின் விருது பட்டியல் இதோ:

  • எஸ்பிஐ வழங்கும் நிதி சேவைகள் விருது, லண்டன் பங்கு சந்தைக்கு வழங்கப்பட்டது.
  • சட்ட நிறுவன விருது, இந்தியாவிலுள்ள ட்ரிலீகர் லா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
  • கன்சல்டன்சி நிறுவன விருது- சன்னம் 4 என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
  • மீடியா கலை மற்றும் கலாசார விருது Partition மியூசியத்திற்கு வழங்கப்பட்டது.
  • இவ்வாண்டின் சிறந்த சன் குளோபல் டீல் விருது யுகே ஐஆர்இடிஏவுக்கு வழங்கப்பட்டது.
  • வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு அமைப்பு விருது: மான்செஸ்டர் இந்தியா பார்ட்னர்ஷிப்புக்கு வழங்கப்பட்டது.
  • ஃபுரபொஷனல் ஆப் தி இயர் விருது- பட் ஷைனிக்கு வழங்கப்பட்டது.
  • சமூக தாக்கத்திற்கான விருது ஸ்டாண்டர்ட் சார்டர்ட்டுக்கு வழங்கப்பட்டது.
  • யுகே-இந்தியா உறவுகளுக்கான விருது பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது.
  • குளோபல் இந்திய ஐகான் விருது, ஷில்பா ஷெட்டிக்கு வழங்கப்பட்டது.
English summary
The 2nd Annual UK-India Awards ceremony was held to celebrate the winning partnership between the UK and India. The 2018 event acknowledged and celebrated individuals and organisations who have made a significant contribution to strengthening the bilateral relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X