For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன்- இந்தியா வர்த்தக மாநாடு.. இன்றும் நாளையும் என்ன நடக்கும்.. முழு விபரம்

இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்றும் நாளையும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்றும் நாளையும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி வர்த்தகம், அரசியல் மற்றும் பொது விவகாரம் தொடர்பாக இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டம் தொடங்கியது.வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டம் லண்டனில் தாஜ் பக்கிங்ஹாம் கேட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இன்று நடக்கும் நிகழ்வின் அட்டவணை வெளியாகி உள்ளது.

UK-India Week 2018: Two days Full Schedule and event details

காலை 9..30 - 1 மணி வரை

இந்த மாபெரும் நிகழ்வில் இன்று காலை நடந்த தொடக்க விழாவில், இந்தியா நிறுவனத்தின் நிறுவனர், மனோஜ் லத்வா வரவேற்பு உரையாற்றினார். இந்தியா பிரிட்டன் உறவு குறித்து அவர் இந்த தொடக்க உரையில் பேசினார். சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய இந்த உரை 1 மணி வரை நடந்தது. அதன்பின்பாக உயரதிகாரி, ஒய் கே சின்ஹா தொடக்க உரையாற்றினார்.

முன்னாள் எம்பி. சர் வின்ஸ் கேபிள் சிறப்பு உரை

முன்னாள் வர்த்தக, வியாபர செயலாளரும், லிபரல் டெமோக்ரட்டிக்ஸ் நிறுவனருமான முன்னாள் எம்பி. சர் வின்ஸ் கேபிள் சிறப்பு உரையாற்றினார். அவர் பிரிக்சிட்டிற்கு எதிராக பேசியவர்களின் மிகவும் முக்கியமானவர் இவர். இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் இனி வளரப்போகும் உறவு குறித்து இவர் பேசினார்.

சர்வதேச இந்தியாவை சந்திக்கும் சர்வதேச பிரிட்டன்

முன்னாள் எம்பி பிரீத்தி பாட்டில்., இதில் இந்தியா பிரிட்டன் உறவு சந்திக்கும் சவால்கள் குறித்து பேசினார்.இதில் பிரிட்டன் இந்தியாவுடனான உறவை இன்னும் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார். பிரிக்சிட்டுக்கு பின் இந்தியா பிரிட்டன் உறவு எப்படி எல்லாம் மாறுயுள்ளது என்று இதில் விவாதமும் நடத்தப்பட்டது.

டெக்ஸ்ட்- எக்ஸ்-சேஞ்ச் வெளியீடு

தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தியாவும் பிரிட்டனும் எப்படி உறவை பேணலாம் என்று இதில் விவாதிக்கப்பட்டது. இரண்டு நாடுகளிலும் அதிக திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். இதில் தொழில்நுட்பம் குறித்து மிகவும் நுணுக்கமாக விவாதிக்கப்பட்டது. மேலும் டெக்ஸ்ட்- எக்ஸ்-சேஞ்ச் எனப்படும் தொழில்நுட்ப பகிர்வு திட்டமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதியம் 1.30 முதல் 6.30 வரை

டாக்டர் ராஜீவ் குமாருடன் உரையாடல்

பொருளாதார நிபுணர், எழுத்தாளர், நிதி ஆயோக்கின் துணை தலைவரான டாக்டர் ராஜீவ் குமாருடன் உரையாடும் நிகழ்வு அதன்பின் நடைபெற்றது. 4 வருட மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதா மாற்றம், அரசின் பொருளாதார அணுகுமுறை ஆகியவை குறித்து விருந்தினர்களுடன் பரந்த அளவில் உரையாடினார்.

இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம்

இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில், நடிகரும் தொழிலதிபருமான விவேக் ஓப்ராய் பேசினார். இந்தியா பிரிட்டன் உறவு மூலம் படிப்பற்றை எப்படி வளர்க்கலாம், எப்படி புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம், அறிவு தளத்தில் எப்படி புதிய விஷயங்களை புகுத்தலாம் என்று பேசினார். இந்த உறவு உலக அளவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும், இந்திய ஊடகங்கள் எவ்வளவு முன்னேறும் என்றும் பேசினார்.

ஆற்றல் மற்றும் காலநிலை மாறுபாட்டின் எதிர்காலம்

ஆற்றல் மற்றும் காலநிலை மாறுபாட்டின் எதிர்காலம் என்று தலைப்பின் கீழ் சர்வதேச வர்த்தகத்திற்கான நிழல் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. பாரி கார்டினர் பேசினார். ஆற்றல் மற்றும் காலநிலை மாறுபாட்டின் எதிர்காலம் இந்த மாநாடு மூலம் எப்படி எல்லாம் மாற்றத்தை சந்திக்கும் என்று அவர் விளக்கினார். இதில் காலநிலை மாறுபாடு குறித்த சந்தேகங்களுக்கு, அவர் மற்றும் அவர் குழுவில் இருக்கும் நபர்கள் விளக்கம் அளித்தனர், இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைத்து எப்படி பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும் கூறினார்கள்.

பெரிய விவாதம்: முக்கியத்துவம், ஜனநாயகம், மற்றும் ஊழல்

முக்கியத்துவம், ஜனநாயகம், மற்றும் ஊழல் என்ற தலைப்பில், காமன்வெல்த் எண்டர்பிரைஸ் மற்றும் முதலீட்டு கவுன்சில் தலைவர் லார்ட் மார்லன் பெரிய விவாதம் ஒன்றை முன்னெடுக்க உள்ளார். இன்று 4.30 மணியளவில் இந்த முக்கியமான உரையாடல் நிகழ உள்ளது. அதன்பின் பொருளாதார நிபுணர் ஷேல் சேத், இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியையே, புதிய நிறுவனங்களையும் தொடங்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பேச இருக்கிறார். மோடி தலைமையிலான அரசு ஊழலை ஒழிக்க என்ன விஷயங்களை செய்தது என்று பேச உள்ளார்.

ஜூன் 21ம் தேதி காலை 8-9.30

ஜூன் 21ம் தேதி காலை 8-9.30 காலை நடக்கும் உணவு சந்திப்பில் அறிஞர்கள், நிபுணர்கள் கலந்துரையாட இருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு விழா நடக்கும் அரங்கை சுற்றி வந்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகா தினம் கடை பிடிக்கப்படுவதால், யோகா சொல்லிக்கொடுக்கவும், பயிற்சி எடுக்கவும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10- 1 மணி வரை

இந்தியா பிரிட்டன் இடையே வர்த்தக உறவை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பொதுவான அறிவுப்புகளுக்கு பின்பு காலை நிகழ்வு தொடங்கும். தொழில் ரீதியான உறவை மேப்படுத்த இதில் நிறைய அறிவிப்புகள் வெளியாகும். பிரிட்டனிலும் இந்தியாவிலும் உள்ள நகர பகுதிகள் குறித்து இதில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் மக்கள்

இந்தியா மக்களும் , பிரிட்டன் மக்களும் ஒன்றாக இணைந்து ஏற்பாடு புதிய முன்னேறிய நகரங்களை உருவாக்கலாம், எப்படி முன்னேறிய மக்களை உருவாக்கலாம், மக்களின் அறிவை பெருக்க என்ன செய்யலாம், என்பது குறித்து பேசப்படும். கல்வியை அதிகரிக்க , இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்தை சரி செய்ய நிறைய திட்டங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இலகுத்தன்மையின் எதிர்காலம் மற்றும் மூவ் இந்தியா அறிமுகம்

இந்தியா பிரிட்டன் இடையே இலகுவான பயணத்திற்கு என்னென்ன திட்டங்கள் உருவாக்க முடியும் என்று இந்த நிகழ்வில் பேசப்பட உள்ளது. இந்தியாவில் இருக்கும் தொழில்முனைவோர்கள், பிரிட்டனுடன் எப்படி உறவு கொள்ள இருக்கிறார்கள், தானியங்கி கார்கள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எப்படி உறவை வலுப்படுத்தும் என்றும் கூறப்பட உள்ளது. முக்கியமாக, இதில் மூவ் இந்தியா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான இலகுத்தன்மை குறித்து இதில் விவாதிக்கப்படும்.

English summary
The 5th Annual UK-India Leadership Conclave has commenced at De Vere Latimer Estate Latimer, Buckinghamshire. The conclave has been hailed as a landmark event for growing and developing the UK and India's strategic relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X